For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருங்க இவரு? 7000 விக்கெட்.. 60 வருட கிரிக்கெட்.. 85 வயதில் ஓய்வு.. தெறிக்கவிடும் வெ.இண்டீஸ் தாத்தா

Recommended Video

Cecil Wright announces retirement at the age of 85 from cricket

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் தன் ஓய்வை அறிவித்துள்ளார். இல்லை.. இல்லை.. வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் தாத்தா தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

செசில் ரைட் ஓய்வை அறிவித்த போது, இப்படி தான் எல்லோரும் குழம்பிப் போனார்கள். வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ளூர் போட்டிகளில் ஆடி விட்டு, பின் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்த செசில் ரைட் 85 வயதில் ஓய்வை அறிவித்தார்.

இவர் எப்போதோ கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு, இப்போது ஓய்வை அறிவிக்கவில்லை. இப்போதும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். அதைக் கேட்டால் தான் மெர்சல் ஆகிறது. யாருப்பா அந்த தாத்தா?

பவுலரை பந்தால் அடி, வெளுத்த விக்கெட் கீப்பர்...! வினையாகி போன அந்த முயற்சி..! வைரல் வீடியோபவுலரை பந்தால் அடி, வெளுத்த விக்கெட் கீப்பர்...! வினையாகி போன அந்த முயற்சி..! வைரல் வீடியோ

யார் இந்த செசில் ரைட்?

யார் இந்த செசில் ரைட்?

சாமுவேல் செசில் ரைட் என்பதே இவரின் முழுப் பெயர். வெஸ்ட் இண்டீஸ்-இன் ஜமைக்கா கிரிக்கெட் அணிக்காக 1959இல் ஒரே ஒரு முதல் தர போட்டியில் ஆடி இருக்கிறார் செசில் ரைட். மற்றபடி அவர் ஆடியது அனைத்துமே ஐசிசி கணக்கில் வராத உள்ளூர் போட்டிகள் தான்.

ஜாம்பவான் வீரர்களுடன் ஆடினார்

ஜாம்பவான் வீரர்களுடன் ஆடினார்

1950களில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கிரிக்கெட் ஆடி வந்த செசில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான கார்பீல்ட் சோபர்ஸ், வெஸ் ஹால், விவியன் ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னர் என பலருடன் களத்தில் கிரிக்கெட் ஆடி உள்ளார்.

இங்கிலாந்து சென்றார்

இங்கிலாந்து சென்றார்

எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்று விட்டார் செசில். அங்கே மூன்று ஆண்டுகள் ஆடியவர், எனிட் என்பவரை மணந்து கொண்டு அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.

5 சீசனில் 538

5 சீசனில் 538

அங்கே தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வந்த செசில், ஒரு முறை ஐந்து சீசன்களில் 538 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டி இருக்கிறார். அவரது சராசரி 27 மட்டுமே. அது தான் அவரது சிறந்த சாதனை என கூறப்படுகிறது.

விக்கெட்கள் எண்ணிக்கை

விக்கெட்கள் எண்ணிக்கை

சுமார் 60 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி விட்ட அவர், சுமார் 7000க்கும் அதிகமாக விக்கெட் வீழ்த்தி இருப்பார் என கூறப்படுகிறது. இது குறித்த சரியான கணக்கு எங்கும் இல்லை. அப்படி இருந்தால், கிரிக்கெட் உலகில் இது பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

வயது என்ன?

வயது என்ன?

தற்போது 85 வயது ஆகும் செசில் ரைட், 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி வருகிறார். இதுவும் கிரிக்கெட் உலகில் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. எனினும், இவர் இத்தனை ஆண்டுகளும் முதல் தர போட்டிகள் போல பதிவு செய்யப்பட்ட போட்டிகளில் ஆடாததால், ஐசிசி இவரை அங்கீகரிக்குமா? என தெரியவில்லை.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

எப்படி ஒரு மனிதர் 60 ஆண்டு காலம் கிரிக்கெட் ஆட முடியும் என அவரிடம் கேட்ட போது, அது எனக்கே தெரியவில்லை என கூறி இருக்கிறார். இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் தான் வசித்து வருகிறார். அங்கே இருக்கும் பாரம்பரிய உணவுகளை தான் உண்டு வந்ததாக கூறினார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

மது அருந்தும் பழக்கம் இல்லை. அவ்வப்போது ஒன்று, இரண்டு பீர் மட்டுமே அடிப்பேன் என்றும் தன் வலிமையின் ரகசியத்தை கூறினார். தற்போது ஓய்வை அறிவித்துள்ள செசில் ரைட் தாத்தா, வரும் செப்டம்பர் 7 அன்று தன் கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆட உள்ளார்.

எத்தனை போட்டிகள்?

எத்தனை போட்டிகள்?

சரி, அறுபது ஆண்டுகளில் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் ஆடி உள்ளார்? இந்த கேள்வியை கேட்ட போது தனக்கு சரியான கணக்கு தெரியவில்லை என கூறிய அவர், சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) போட்டிகளில் ஆடி இருப்பேன் என்றார்.

20 லட்சமா?

20 லட்சமா?

என்னது.. 20 லட்சமா? என அதிர்ச்சி அளித்தது அந்த பதில். ஒருவேளை அவர் 20 லட்சம் பந்துகள் வீசி இருப்பேன் என்பதை அப்படி கூறி விட்டாரா? என்று தெரியவில்லை அல்லது வேடிக்கையாகவும் கூறி இருக்கலாம்.

Story first published: Wednesday, August 28, 2019, 15:12 [IST]
Other articles published on Aug 28, 2019
English summary
Cecil Wright announces retirement at the age of 85 from cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X