Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ்லீக் டி20: முக்கியமான போட்டியில் இன்று நார்தன் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் மோதல்

Champions league T20: Mumbai Indians v Northern Knights today
ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணிகள் மோதுகின்றன.

6வது சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நாளை முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ஹைதராபாத், சண்டிகர், ராய்ப்பூர், பெங்களூர் ஆகிய 4 நகரங்களில் நடக்க உள்ளது. இதில் பிரதான சுற்றில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்(இந்தியா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா), பார்படோஸ் டிரைடென்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் எஞ்சிய இரண்டு அணிகள் தகுதி சுற்று ஆட்டம் மூலம் முடிவாகும். தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து), சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இதில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும். தகுதி சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி 'ஏ' பிரிவிலும், 2வது இடம் பெறும் அணி 'பி' பிரிவிலும் 5வது அணியாக இணையும்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தகுதி சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜெகன் முபாரக் தலைமையிலான சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை), முகமது ஹபீஸ் தலைமையிலான லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதின.

இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டேனியல் பிளைன் தலைமையிலான நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணியை சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் லயன்ஸ் அணியிடம் தோல்வி கண்டாலும், அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை எளிதாக வென்றதால் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.

நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணி தனது 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுடன், ஏறக்குறைய பிரதான சுற்று வாய்ப்பையும் உறுதி செய்து விட்டது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Tuesday, September 16, 2014, 17:56 [IST]
Other articles published on Sep 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+