For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி 2025- பைனலில் இந்தியாவுடன் இந்த அணி தான் பலப்பரீட்சை நடத்தும்.. ஆஸி.வீரர் கருத்து

மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கி ஒரு வாரமே முடிந்த நிலையில், அதற்குள் இரண்டு அணிகள் அரை இறுதிச்சுற்று தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில் இறுதி போட்டியில் எந்த அணி மோதும் என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டானியல் கிறிஸ்டியன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஆஸ்திரேலியா அணி தற்போது சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் எங்கள் அணி வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை."

2025-

"ஆனால் ஐசிசி தொடரில் விளையாடும் போது தங்களின் சிறந்த கிரிக்கெட்டை எங்கள் அணி வீரர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜோஸ் இங்கிலீஷ் அலெக்ஸ் காரி, மேக்ஸ்வெல் பிரமாதமாக விளையாடினார்கள். இதேபோன்று எங்கள் அணி பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள் தான் என நினைக்கின்றேன்."

"ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இன்றி எங்கள் அணி பவுலர்கள் 350 ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள். தொடர்ந்து நாம் இதே போல் விளையாடி வந்தால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்தும் என நான் நினைக்கின்றேன். தற்போது இருக்கும் இளம் வீரர்கள் அபாரமாக ஷாட்களை ஆடுகிறார்கள்."

"அதுவும் போட்டி ஆரம்பத்திலே விளையாடுவது ஆச்சரியம் அளிக்கின்றது. நாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி கிடையாது .இதன் மூலம் பவுலர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதனால் பவுலர்கள் தங்களுடைய திட்டத்தை களத்தில் செயல்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள். நான் பந்து வீசும் போதெல்லாம் பெரிய அளவில் லென்த்தை மாற்றி வீசினால் தான் பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள்."

"ஆனால் தற்போது சிறு அளவில் மாற்றினால் கூட பேட்ஸ்மேன்கள் அடித்து விடுகிறார்கள். தற்போது பேட்ஸ்மேன்கள் திறன் மென்மேலும் வளர்ந்து வருகிறது.ஆஸ்திரேலிய அணி சரியான நேரத்தில் தற்போது பார்மை மீட்டு இருக்கிறது" என்று டேனியல் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, February 25, 2025, 21:45 [IST]
Other articles published on Feb 25, 2025
English summary
Champions Trophy 2025- Australian Alltounder Dan christian Predicts Two Finalist
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+