Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபியில் இந்த 2 வீரர்களும் எங்கள் திட்டத்தில் இல்லை.. பயிற்சியாளர் கம்பீர் ஓபன் டாக்

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரும் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி தொடரை வென்று இருக்கிறது.இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் பல கேள்விகளுக்கு விடையும் கொடுத்திருக்கிறது.

உதாரணத்திற்கு இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் யார் இந்திய அணியின் தொடக்க வீரர் யார்? கில்லுக்கு எந்த இடம் வழங்கப்படும் என்பது குறித்து எல்லாம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இங்கிலாந்து தொடரில் பதில் கிடைத்திருக்கிறது.

ind vs eng rohit sharma virat kohli rishabh pant

இந்த சூழலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து கம்பீர் தெளிவான பதிலை கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், தற்சமயத்தில் இந்திய அணியின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் என்றால் அது கே எல் ராகுல் தான். ஏனென்றால் அவர் எங்களுக்கு பல போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். 15 பேர் கொண்ட அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்காக இரண்டு பேரும் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாது. ஏனென்றால் அணியில் ஏற்கனவே பல திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். எனவே ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை அவர் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இதை தான் என்னால் தற்போது சொல்ல முடியும். சாம்பியன்ஸ் கோப்பையில் கேஎல் ராகுலை வைத்து தான் நாங்கள் விளையாட போகிறோம் என்று கம்பீர் கூறினார். இதேபோன்று ஜெய்ஸ்வால் இந்திய அணியின் தொடக்க வீரராக முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கப்பட்டார். ஆனால் தற்போது ஜெய்ஷ்வாலுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் இல்லை என்ற நிலைப்பாட்டை கம்பீர் எடுத்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், ஜெயிஸ்வாலை நாங்கள் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரிலும் விளையாட வைக்க முடிவு எடுத்தோம். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் அவர் நல்ல பார்மில் இருந்தார் இதன் மூலம் இடது கை பேட்ஸ்மேன் தொடக்க வீரராக விளையாடினால், அது அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே அவர் எப்படிப்பட்ட இன்னிங்ஸ் ஆட போகிறார் என்று சோதனை முயற்சியை தான் நான் மேற்கொண்டேன்.

ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், ஒரு இன்னிங்ஸை வைத்து ஒரு வீரரை நாம் எடை போடக்கூடாது. ஸ்ரேயாஸ், எங்கள் அணியின் எவ்வளவு முக்கியமான வீரர் என்று எனக்கு அப்போதிலிருந்து தெரியும். அவர் நம்பர் நான்காவது வீரராக உலக கோப்பையில் பல சிறப்பு மிக்க ஆட்டங்களை ஆடிருக்கிறார். எந்த ஒரு தொடராக இருந்தாலும் அதில் ஸ்ரேயாஸ் இந்தியாவின் முக்கிய வீரர் தான் என்று கம்பீர் கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, February 13, 2025, 16:30 [IST]
Other articles published on Feb 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+