Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ ஆலோசனை

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் அவர் இந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை. எனினும் ரோகித் சர்மா ஓய்வை தேர்வு செய்து இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த தருணத்தில் ரோகித் சர்மாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. இதனால் ரோகித் சர்மா இன்னும் எத்தனை காலம் விளையாடுவார் என தெரியவில்லை. ஏற்கனவே அவர் டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

champions trophy 2025 india cricket team india vs australia hardik pandya rohit sharma

இதன் காரணமாக வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் எப்படி விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரோ அதேபோல் ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ யோசித்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. சூரியகுமார் யாதவ், ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக உள்ள நிலையில் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதனால் அவர் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படுவதில்லை. இதுபோன்று சுப்மன் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால் கில்லை சாம்பியன்ஸ் கோப்பை போன்ற பெரிய தொடரில் இந்திய அணியை வழி நடத்துவதற்கான அனுபவத்தை இன்னும் பெறவில்லை. மேலும் அவருடைய பார்மும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று பண்டும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பும்ராவுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கேப்டன் என்ற அங்கீகாரத்தை வழங்கலாமா என்று யோசனையிலும் பிசிசிஐ இருக்கிறது.

இதனால் ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த உடன் ரோகித் சர்மாவிடம் இது பற்றி பேசி தேர்வு குழு உரிய முடிவை விரைவில் எடுக்கும் என தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி,ரோகித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 3, 2025, 8:20 [IST]
Other articles published on Jan 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+