Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் புயலை கிளப்பும் மொழி பிரச்சினை? இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாய் மொழி என்ன தெரியுமா?

துபாய்: தமிழ்நாட்டில் மீண்டும் மொழி குறித்தான விவாதம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இரு மொழி கொள்கைதான் வேண்டும் என தமிழ்நாடும், மூன்றாவதாக ஒரு மொழி கற்றே ஆக வேண்டும் என மத்திய அரசும் கூறி வருகிறது.இந்த சூழலில் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு அடையாளமாக இருப்பது மொழி மட்டும்தான்.

மொழிக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த சமூக மக்களும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை கலைந்து போராடுவார்கள். அந்த வகையில் பல போராட்டங்களுக்குப் பிறகு பல மொழிகள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு பெங்காலி மொழியை பேணுவதற்காக வங்கதேசத்தில் பெரும் அளவு போராட்டம் நடைபெற்றது.

Champions Trophy 2025 Ind vs Pak virat kohli Rohit Sharma

இதனை நினைவு கூறும் விதமாக யுனெஸ்கோ ஆண்டு தரும் பிப்ரவரி 21ஆம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடுகிறது. அந்த வகையில் தற்போது சாம்பியன் டிராபி தொடரில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாய்மொழி என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மும்பையில் வசித்து வருவதால் அவருடைய தாய் மொழி ஹிந்தி என பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் ரோகித் சர்மாவின் தாய்மொழி தெலுங்கு ஆகும். ரோகித் சர்மா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை பிறந்தவர். இதேபோன்று இந்திய அணியின் துணை கேப்டன் கில், பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். இதனால் அவருடைய தாய் மொழி பஞ்சாபி ஆகும். விராட் கோலி, டெல்லி மாநிலத்தில் பிறந்தாலும் அவருடைய பூர்வீகம் பஞ்சாப் ஆகும். இதனால் விராட் கோலியின் தாய்மொழி பஞ்சாபி ஆகும்.

ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவருடைய தாய் மொழி என்னவென்று கேட்டால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள். ஆம், ஸ்ரேயாஸ் தாய்மொழி தமிழ். தமிழ் மொழி பேசும் ஸ்ரேயாஸ் குடும்பத்தினர் மும்பையில் பல காலத்திற்கு முன்பு செட்டில் ஆகிவிட்டார்கள். இதனால் ஸ்ரேயாஸ் தமிழ், மராத்தி, ஹிந்தி என மூன்று மொழிகளும் தெரியும்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கே எல் ராகுல் கர்நாடகாவில் பிறந்தவர். இதனால் அவருடைய தாய் மொழி கன்னடம். இதேபோன்று நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ரிஷப் பண்டின் தாய்மொழி குமோனி. இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவின் சொந்த மாநிலம் குஜராத். அவருடைய தாய் மொழி குஜராத்தி.

இதேபோன்று அக்சர் பட்டேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய தாய் மொழியும் குஜராத்தி. ஜடேஜா தாய் மொழியும் குஜராத்தி தான். முகமது சமி உத்திரபிரதேசத்தில் வசித்து வந்தாலும் அவருடைய தாய் மொழி பெங்காலி. ஆர்ஸ்தீப் சிங் மத்திய பிரதேசத்தில் வசித்து வந்தாலும் அவருடைய தாய் மொழி பஞ்சாபி.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா டெல்லியில் வசித்து வருகிறார். அவருடைய தாய் மொழி ஹிந்தி. இதேபோன்று உத்திரபிரதேசத்தில் வசித்து வரும் குல்தீப் யாதவ் தாய் மொழியும் ஹிந்தியாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடித்திருக்கும் வாஷிங்டன் சுந்தர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் தாய்மொழி தமிழ் ஆகும். தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் இருக்கும் 15 வீரர்களின் இரண்டு வீரர்கள் தாய்மொழி மட்டும் தான் ஹிந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 21, 2025, 16:35 [IST]
Other articles published on Feb 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+