Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி - ஒவ்வொரு அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி, தோல்வி எவ்வளவு.. Head to Head

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் உலகின் டாப் எட்டு அணிகள் இடம்பெறும். இதனால் ரசிகர்கள் இந்த தொடரை மினி உலக கோப்பை என்று அழைப்பார்கள். உலகக்கோப்பை தொடரிலாவது பல கத்துக் குட்டி அணிகள் பங்கு பெறும். அவர்களை எளிதில் வீழ்த்தி விட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆனால் இந்த தொடரில் டாப் எட்டு அணிகளும் பலமானவை என்பதால் அரை இறுதிக்கு செல்வதே மிகவும் கடினமான சூழலாக இருக்கும். இந்த நிலையில் இந்திய அணி ஏ பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் இடம்பெற்று இருக்கிறது.

Champions Trophy 2025 India cricket team rohit sharma virat kohli

இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி ஒவ்வொரு அணிகளுக்கும் எதிராக எவ்வளவு வெற்றியை பெற்றிருக்கிறது எவ்வளவு தோல்வியை பெற்றிருக்குது என்பதை தற்போது பார்க்கலாம். சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு முறை இந்திய அணி பல பரிட்சை நடத்தி, நான்கு முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது.

இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் எதிர்கொண்ட இந்திய அணி மூன்றிலுமே வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாலுக்கு எதிராக மூன்று போட்டிகளில் இந்தியா விளையாடி இருக்கிறது. இதில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறது. இதில் ஒரு போட்டியில் இந்தியா தான் வென்றிருக்கிறது பாகிஸ்தானுக்கு எதிராக தான் அதிகபட்சமாக இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் பாகிஸ்தான் மூன்று போட்டிகளிலும் இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் இதில் சமன் செய்துவிடலாம். இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிராக சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. விளையாடிய ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 15, 2025, 23:40 [IST]
Other articles published on Feb 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+