Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி: துபாயில் இந்திய அணியின் ரெக்கார்ட் என்ன? வெற்றி, தோல்வி? அதிக ரன் அடித்தது யார்

மும்பை: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. துபாய் மைதானம் கொஞ்சம் தொய்வாக இருக்கும். மேலும் மாலை நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும் என்பதால் டாஸ் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

துபாய் மைதானத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடி இருக்கிறார்கள். எனினும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் பெரிய அளவு இங்கு ஷமியை தவிர விளையாடியதில்லை.

Champions Trophy 2025 Ind vs Pak rohit sharma virat kohli

இந்த நிலையில் துபாயில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரெக்கார்டுகளை தற்போது பார்க்கலாம். இந்திய அணி துபாயில் ஆறு ஒருநாள் போட்டிகளின் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் டையும் அடைந்திருக்கிறது. துபாயில் இந்திய அணி அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் என்றால் அது 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள்.

குறைந்தபட்ச ஸ்கோர் என்றால் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள். துபாயில் அதிக ரன்கள் அடித்திருக்கும் இந்திய வீரர் என்றால் அது ஷிகர் தவான் தான். தவான் 342 ரன்கள் துபாய் மைதானத்தில் அடித்திருக்கிறார். தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் தவான் தான். இங்கு அவர் 127 ரன்கள் அடித்திருக்கிறார்.

துபாயில் மொத்தமாக குல்தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தி இருக்கிறார். அவர் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஷிகர் தவான், தவிர தற்போது இருக்கும் அணியில் ரோகித் சர்மா துபாய் மைதானத்தில் 317 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் ஒரு சதம் இரண்டு, அரை சதம் அடங்கும். விராட் கோலி துபாய் மைதானத்தில் இதுவரை சதம் அடித்ததில்லை. அதே போல் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலும் கோலி சதம் அடிக்கவில்லை.

துபாயில் இந்திய அட்டவணை: நேரம் மதியம் 2.30

பிப்ரவரி 20: வங்கதேசத்திற்கு எதிராக

பிப்ரவரி 24: பாகிஸ்தானுக்கு எதிராக

மார்ச் 2: நியூசிலாந்துக்கு எதிராக

Story first published: Tuesday, February 18, 2025, 16:49 [IST]
Other articles published on Feb 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+