Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி! எந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு? விவரம்

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது.

இந்தியா விளையாடும் போட்டிகள் ஹைபிரிட் முறைப்படி துபாயில் நடத்தப்படும் என தெரிகிறது. மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

champions trophy 2025 india cricket team rohit sharma virat kohli

டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா என மூன்று வீரர்களுமே இந்த தொடரில் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. இதேபோன்று ஒரு நாள் தொடரில் தொடக்க வீரராக கில் தான் இடம் பெறுவார். விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் அலி போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும்.

நல்ல பார்மில் இருப்பதால் அவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கும்.விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தொடர்வார் என தெரிகிறது. ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா இந்த அணியில் இடம்பெறக்கூடும். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிதீஷ்குமார் ரெட்டிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

கூடுதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம்பெறக்கூடும். கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக அக்சர்பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இடம்பெற கூடும். வேகபந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆர்ஸ்தீப் சிங், முகமது ஷமி, பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்கலாம். கூடுதல் வீரர்களாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படலாம். இந்தத் தொடருக்கான அணி வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்திய அணி உத்தேச பட்டியல் : ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா,அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஆர்ஸ்தீப் சிங், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா, கூடுதல் வீரர்கள்- ரிங்கு சிங், நிதீஷ் ரெட்டி, ரியான் பராக்

Story first published: Tuesday, December 24, 2024, 13:35 [IST]
Other articles published on Dec 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+