Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு உரிய அங்கீகாரமே கிடைக்கவில்லை.. ஸ்ரேயாஸ் ஐயர் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: 2023 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 500 ரன்கள் மேல் அடித்து அசத்தினார். ஆனால் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை எனக் கூறி அவரை ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.

எனினும் அதன் பிறகு ஸ்ரேயாஸ் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றினார். ஆனால் கோப்பையை வென்ற பிறகு அந்த அணியில் இருந்து ஸ்ரேயாஸ் வெளியேறி தற்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சென்றிருக்கிறார்.

Champions trophy 2025 Ind vs NZ shreyas iyer rohit sharma

அது மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சாம்பியன்ஸ் டிராபி எனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. வாழ்க்கையில் இந்த பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன்.

குறிப்பாக 2023 உலக கோப்பை தொடரில் விளையாடிய பின் நான் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டேன். அப்போது நான் என்ன தவறு செய்தேன். என்ன செய்தால் அனைத்தும் சரியாகும் என்பது குறித்து யோசித்து அதன்படி நடந்தேன் எனது உடல் தகுதியை நான் மேம்படுத்துவதை கவனம் செலுத்தினேன்.

நாம் எனக்குள்ளே நிறைய கேள்விகளை எழுப்பி கொண்டேன். அதன் பிறகு உடல் தகுதியை மீட்பதற்காக கடும் பயிற்சியை மேற்கொண்டேன். இதற்காக சிறப்பு திட்டங்களை தீட்டி அட்டவணைகளை தயார் செய்து அதன்படி என் பயிற்சியை செய்து வந்தேன். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும்போது தான் உடல் தகுதி என்பது எவ்வளவு முக்கியம் என தெரிய வந்தது.

ஐபிஎல் ஐ பொறுத்தவரை எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தோன்றியது. கோப்பையை வென்ற பிறகு எனக்கு இவ்வாறு தோன்றியது. என் வாழ்க்கையில் சரிவை நோக்கி சென்ற போது என்னிடம் சிலர் மட்டும்தான் தொடர்பில் இருந்தார்கள். அதில் குறிப்பாக என்னுடைய பயிற்சியாளர் சாகரின் பங்கு மிகவும் முக்கியமானது. நான் இன்று நன்றாக விளையாடி வருவதற்கு அவர்தான் காரணம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 11, 2025, 20:26 [IST]
Other articles published on Mar 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+