For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 வீரர்கள் அடங்கிய பட்டியல்

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த டாப் 10 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். உலகின் டாப் எட்டு அணிகள் மோதும் இந்த தொடர் 1998 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

இவர் 17 போட்டியில் விளையாடி 791 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், ஒரு அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை இலங்கை அணியின் ஜெயவர்த்தனே பிடித்திருக்கிறார். 22 போட்டிகளில் விளையாடி உள்ள ஜெயவர்த்தனே, 742 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதம் அடங்கும்.

Champions Trophy 2025 India cricket team rohit sharma virat kohli

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் பிடித்திருக்கிறார். தவான் பத்து போட்டிகளில் விளையாடி 701 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் மூன்று சதம், மூன்று அரை சதம் அடங்கும். நான்காவது இடத்தை இலங்கை அணியின் சங்ககாரா பிடித்திருக்கிறார். சங்ககாரா 22 போட்டிகளில் விளையாடி 683 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் நான்கு அரை சதம் அடங்கும்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய வீரர் கங்குலி இருக்கிறார். 13 போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 665 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், மூன்று அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் காலிஸ் இருக்கிறார். காலிஸ் 17 போட்டியில் விளையாடி 653 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும்.

7வது இடத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் பிடித்திருக்கிறார். 19 போட்டியில் விளையாடிய டிராவிட் 627 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் ஆறு அரை சதம் அடங்கும். 8வது இடத்தை பிடித்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 18 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 593 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் ஒரு சதம், நான்கு அரை சதம் அடங்கும். 9வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திர பால் இடம் பிடித்திருக்கிறார். அவர் 16 ஆட்டங்களில் 587 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரைசதம் அடங்கும். இந்திய அணியில் தற்போது இடம் பிடித்திருக்கும் விராட் கோலி 529 ரன்கள் உடன் பதினோராவது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 481 ரன்கள் உடன் 14 ஆம் இடத்திலும் உள்ளனர்.

Story first published: Saturday, February 15, 2025, 16:35 [IST]
Other articles published on Feb 15, 2025
English summary
Champions Trophy 2025 - List of Highest run scorers in this series History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+