Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 பவுலர்கள் யார்?

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் கைல் மில்ஸ். இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 15 ஆட்டங்களில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Champions Trophy 2025 India cricket team rohit sharma virat kohli

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா. 16 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா மொத்தம் 25 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் முரளிதரன் இருக்கின்றார். இவர் 17 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிரட்லி இருக்கின்றார்.16 போட்டியில் விளையாடியுள்ள பிரட்லி மொத்தமாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மெக்கராத் இருக்கின்றார். இவர் 12 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஆண்டர்சன் ஐந்தாவது இடத்தை பகிர்ந்து உள்ளார். இவரும் 12 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் 7வது இடத்தில் காலிஸ் இருக்கின்றார். இவர் 17 போட்டியில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் 8வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டில்லியான் இருக்கின்றார்.

இவர் 7 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் 9வது இடத்தில் இலங்கை வீரர் வாஸ், நியூசிலாந்து வீரர் டேனியல் விக்டோரியும் இருக்கிறார்கள். இருவரும் தலா 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் 11வது இடத்தில் மூன்று வீரர்கள் இருக்கிறார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன், நியூசிலாந்து வீரர் சாண் பாண்ட் ஆகியோர் தலா 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.

Story first published: Saturday, February 15, 2025, 19:44 [IST]
Other articles published on Feb 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+