Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC தொடர்களில் தொடர்ந்து அதிக போட்டிகளை வென்ற இந்திய அணி கேப்டன் யார்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று தந்த ஒரே கேப்டன் என்றால் அது தோனி தான். தோனியின் இந்த சாதனையை விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சமன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி தொடரை வெல்லவில்லை. இந்த சூழலில் ஐந்து ஐபிஎல் கோப்பையை வென்று தந்த ரோகித் சர்மா ஐசிசி தொடரிலும் தோனியின் ரெக்கார்டு அருகே வரை வந்தார்.

Champions Trophy 2025 India cricket team Virat kohli Rohit sharma

ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் தோற்ற இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை வென்றது. இந்த சூழலில் ஐசிசி தொடரின் தொடர்ந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த கேப்டன்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மகேந்திர சிங் தோனி. தோனி தலைமையில் இந்திய அணி 2012 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 12 போட்டிகளில் தோனி தலைமையில் வென்றது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. 2023 50 வருட கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து பத்து ஆட்டங்களில் வென்றது.

எனினும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தொடரில் 8 போட்டிகளில் வென்றது 2003 50 உலகக் கோப்பையில் இந்திய அணி லீகாட்டத்திலும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 28, 2025, 16:54 [IST]
Other articles published on Feb 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+