Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் யார்?

துபாய்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக நல்ல பொழுதுபோக்கு வழங்கிய சாம்பியன்ஷிப் தொடர் தற்போது முடிவடைந்து இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றி இருக்கிறது.

இந்த சூழலில் பாகிஸ்தானில் இருந்த ஆடுகளங்கள் ஒருவிதமாகவும் துபாயில் இருந்த ஆடுகளம் ஒருவிதமாகவும் செயல்பட்டது. இந்த நிலையில் இந்த தொடரின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட், அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

முதலில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா முதலிடத்தில் இருக்கின்றார். ரச்சின் ரவீந்திரா 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் இருக்கிறார். ஸ்ரேயாஸ் 5 போட்டிகளில் விளையாடி 243 ரன்கள் பிடித்துள்ளார்.

227 ரன்கள் எடுத்த பென்டக்கட் மூன்றாவது இடத்திலும், 225 ரன்கள் எடுத்த ஜோ ரூட் நான்காவது இடத்திலும் உள்ளனர். தங்க நிற பேட் வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி பைனலில் 1 ரன் மட்டுமே எடுத்து 218 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதேபோன்று அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி, முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இறுதிப்போட்டியில் பங்கேற்காத அவர் இந்த தொடரில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மூன்று வீரர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் ஆகியோர் தலா ஒன்பது விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் பிரஸ்வெல் 8 விகெட்டுகள் உடன் இடம் பிடித்திருக்கிறார். சாம்பியன்ஷிப் தொடரில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கின்றார். கோலி ஏழு கேட்ச்களை பிடித்துள்ளார். இதேபோன்று நியூசிலாந்து அணியின் வில்லியம்சனும் ஏழு கேட்ச் பிடித்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதேபோன்று இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ் ஆகியோர் 5 கேட்கள் பிடித்து உள்ளனர்.

Story first published: Monday, March 10, 2025, 6:34 [IST]
Other articles published on Mar 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+