Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் தோற்றதுக்கு ஐசிசி தான் காரணம்.. எங்களுக்கு மட்டும் கஷ்டம்,இந்தியாவுக்கு ஈஸியா? ரமிஸ் ராஜா

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தாங்கள் எதிர்கொண்ட முதல் போட்டியில் நியூசிலாந்து இடமும் அடுத்த போட்டியில் இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பில்டிங் என அனைத்துமே சொதப்பியதுதான். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிக அளவு டாட் பால்களை சந்தித்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Champions Trophy 2025 India vs Pakistan Virat kohli Rohit sharma

இந்த நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா மட்டும் ஐசிசியை விமர்சித்திருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

எப்படி இது போல் அட்டவணை அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும். வங்கதேசம் தற்போது நன்றாக விளையாடி வந்தாலும் நமது வீரர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். ஆனால் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி நாம் தோல்வியை தழுவி விட்டோம்.

இதன் மூலம் கடும் நெருக்கடி நமது வீரர்களுக்கு ஏற்பட்டு விட்டது. பாகிஸ்தான் அணி ஏன் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியை விளையாடவில்லை. குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருக்க வேண்டும்.

அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்குமே சமமான அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் என்று ரமீஷ் ராஜா கூறியுள்ளார். ரமீஸ் ராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்ளாத வரை அந்த அணி முன்னேறாது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

Story first published: Tuesday, February 25, 2025, 19:28 [IST]
Other articles published on Feb 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+