Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி-பும்ராவுக்கு பதில் யாரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும்.. ரிக்கி பாண்டிங் கருத்து

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். பும்ரா முழு உடல் தகுதியை எட்ட முடியாததால் அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அனுபவ வீரர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இல்லாத நிலையில் அவருக்கு பதில் இடது கை வேகப் பந்துவீச்சாளரை தான் தேர்வு செய்ய வேண்டும்.

Champions Trophy 2025 Ind vs Pak rohit sharma virat kohli

டி 20 கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அபாரமாக பந்து வீசினார் என்று அனைவருக்கும் தெரியும். ஆர்ஸ்தீப் சிங் நல்ல திறமை இருக்கிறது. பும்ரா போல் அவரால் பந்து வீச முடியும். புதிய பந்தையும், பழைய பந்தையும் பயன்படுத்தி ஆர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார். இதனால் பும்ராவுக்கு பதில் ஆர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்த வேண்டும்.

இதற்காக ஹர்ஷித் ரானாவை நான் குறை சொல்லவில்லை. அவரிடமும் நிறைய திறமை இருக்கின்றது. புதிய பந்தில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டத்தின் டெத் ஓவரில் பந்து வீச முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். எனவே நான் கேப்டன் ஆக இருந்தால், ஆர்ஸ்தீப் சிங் தான் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி, 2023 உலக கோப்பையில் பும்ராவை விட முகமது சமி அபாரமாக பந்து வீசியதை நினைவுக்கு வந்தார். இதனால் ஷமி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 19, 2025, 13:08 [IST]
Other articles published on Feb 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+