Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி தான் ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக கடைசி தொடர்.. சுரேஷ் ரெய்னா கணிப்பு

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கையில் தான் இருக்கிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்த போட்டிகள் நடைபெறுவதால் இது இந்தியாவுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் கடுமையாக சொதப்புவதால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடும் நெருக்கடியில் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

ind vs eng rohit sharma virat kohli champions trophy 2025

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, "50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் நல்ல முறையில் முன்னேறி இருக்கிறது. அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா 120 என்ற ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடி வருகிறார்".

"இதன் மூலம் இந்தியாவின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா விளங்கி வருகிறார். ரோகித் சர்மாவும் விராட் கோலியும் கடந்த காலங்களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் பல சிறப்பான சாதனைகளை செய்து இருக்கிறார்கள். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் திரும்பவது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்".

"இருவரும் பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய திறமையை படைத்தவர்கள். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறும். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
ஜடேஜா மற்ற வீரர்களை விட நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார்".

"குல்தீப் காயம் காரணமாக கடந்த சில காலமாக விளையாடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இதேபோன்று அக்சர் பட்டேலும் தற்போது கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துபாயில் வேகப்பந்து வீச்சு கொஞ்சம் எடுபடும். இருந்தாலும் சுழற் பந்துவீச்சும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குல்தீப், அக்சர் பட்டேல்,ஜடேஜா என மூன்று பேருமே நல்ல பார்மில் இருக்க வேண்டும்".

"இந்த வீரர்களை ரோகித் எப்படி பயன்படுத்துவார் என்பது மிகவும் முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலிக்கு எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அதிக அளவு ரன்களை அவர் குவித்திருக்கிறார். எனவே ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு வந்தாலே விராட் கோலியின் எனர்ஜி பல மடங்கு அதிகரித்து விடும்".

"தற்போது நடைபெறும் உள்ள மூன்று ஒருநாள் போட்டிக்கும் பயன்படுத்தப்படும் ஆடுகளம் அனைத்தும் ரன்குவிப்புக்கு சாதகமானது. ரோகித் சர்மா ஏற்கனவே டி20 உலக கோப்பையை வென்று விட்டார். தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் கேப்டனாக வென்றால் அது மிகப்பெரிய சாதனைதான். என்னை பொறுத்தவரை ஒரு கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்கும் கடைசி ஐசிசி தொடர் இதுதான். இதை அவர் வென்றால் நான்கு ஐசிசி தொடர்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பெறுவார்" என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 5, 2025, 7:00 [IST]
Other articles published on Feb 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+