Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC Rankings : முன்னேறிய விராட் கோலி, சரிந்த ரோகித்.. 2 ஆட்டங்களில் சொதப்பியதால் கில் ரேட்டிங் சரிவு

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 98 பந்துகளை எதிர் கொண்டு 84 ரன்கள் சேர்த்தார்.

அதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி தற்போது நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி தற்போது 747 என்ற ரேட்டிங்கில் இருக்கின்றார்.

Champions Trophy 2025 ICC Rankings Rohit sharma virat kohli

மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவில் இரண்டாவது இடத்தில் பாபர் அசாமும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக அவருடைய ரேட்டிங்ஸ் கடுமையாக சரிந்திருக்கிறது. எனினும் அவர் 791 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.

இதனால் இறுதிப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்திற்கு கில் தள்ளப்பட்டிருக்கிறார். இதேபோன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் கடந்த இரண்டு போட்டிகளில் பெரிய அளவு சாதிக்கவில்லை. இதனால் அவரும் இரண்டு இடங்கள் பின்தங்கி மூன்றாம் இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் 10 இடங்களில் நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் குல்தீப் சரிவை சந்தித்துள்ளார். குல்தீப் அரையிறுதி போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிந்திருக்கின்றார். இதைப் போன்று ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது 11 வது இடத்தை பிடித்துள்ளார். ஜடேஜா 13-வது இடத்தில் நீடிக்கின்றார்.

Story first published: Wednesday, March 5, 2025, 16:42 [IST]
Other articles published on Mar 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+