Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை- ரோகித் சர்மாவுக்கு தொடக்க ஜோடி யார்? தினேஷ் கார்த்திக் கருத்து

மும்பை : இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் படும் மோசமாக செயல்பட்டார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி வெறும் மூன்று ஒரு நாள் போட்டிகள் தான் விளையாடுகிறது. இதனால் கில் தொடக்க வீரராக களம் இறங்குவாரா இல்லை ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமா என்பது குறித்து தினேஷ் கார்த்திக் கணித்திருக்கிறார்.

Champions Trophy 2025 cricket Rohit sharma Dinesh karthik

சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் காலெடுத்து வைத்து தற்போது ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதம் அடித்திருக்கிறார். இதேபோன்று டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலின் ஸ்ட்ரைக் ரேட் 164 என்ற அளவிலும், சராசரி 36 என்ற அளவில் இருக்கின்றது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஜெய்ஸ்வால் தான் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், தொடக்க ஜோடியை மாற்றும் அவசியம் தற்போது இல்லை என்று நினைக்கின்றேன். ரோகித் சர்மாவும் கில்லும் இன்னும் ஒரு நல்ல காம்பினேஷனாகவே நான் கருதுகிறேன். எனினும் ஜெய்ஸ்வால் ஒரு மூன்றாவது தொடக்க வீரராக அணியில் இருக்கலாம்.

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு நிச்சயம் அவரையும் வந்து சேரும் எதிர்பார்த்த அளவுக்கு கில் சரியாக விளையாடவில்லை என்றால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தரலாம். அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் நடுவரிசை தற்போது மிகச் சிறப்பாக இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் தான் விளையாடுகிறது. இந்த மூன்று போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கும் கில்லுக்கும் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, August 21, 2024, 17:10 [IST]
Other articles published on Aug 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+