Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

78 வருசம் ஆகியும் கிரிக்கெட் கத்துக்கல..பாகிஸ்தான் எங்க பி அணி கூட விளையாடனும்.. யுவராஜ் தந்தை சாடல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியே இந்தியா வீழ்த்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது.

ஆனால் இந்திய அணி தொடர்ந்து ஒரு போட்டியில் கூட தோற்காமல் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை அவமானப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாரும் பரிசளிக்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

மேலும் இந்திய அணியை பாராட்டாத பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லின் முஸ்தாக், எங்கள் அணிக்கு எதிராக பத்து டெஸ்ட், 10 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டும். அப்போது யார் பலமான அணி என தெரிந்துவிடும் என்று வம்பு இழுக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தற்போது யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "நான் சக்லின் முஸ்தாக் பேசியதை பார்த்தேன். முதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒருவர் சிறப்பாக விளையாடினால் அவர்களை முதலில் வாழ்த்த கற்றுக் கொள்ளுங்கள். 78 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் பாகிஸ்தான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை."

"சொந்த அணி வீரர்களையே உங்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் சொல்லிக் கொடுத்து விடப் போகிறீர்கள். முதலில் உங்கள் நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்."

"பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போதெல்லாம் ஏதோ இந்திய அணி உள்ளூர் லோக்கல் அணியுடன் விளையாடுவது போல் தெரிகிறது. பாகிஸ்தான் அணி முதலில் எங்களுடைய பி அணியின் சந்தித்து வெற்றி பெற வேண்டும்" என்று யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் சாடி இருக்கிறார்.

Story first published: Tuesday, March 11, 2025, 18:05 [IST]
Other articles published on Mar 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+