மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத சூழல் என ரோகித் சர்மா தலைமையான இந்திய அணி அடி பாதாளத்திற்கு சென்று வருகிறது.
இதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங்கும் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் அணியை விட்டு நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகிறது.

37 வயதான ரோஹித் சர்மாவுக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தான் கடைசி வாய்ப்பு என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த சூழலில் பார்டர் கவாஸ்கர் தொடரில் சுதந்திரமாக விட்டது போல் இம்முறை ரோகித் சர்மாவை சுதந்திரமாக விடக்கூடாது என்ற நிலையில் பிசிசிஐ இருக்கிறது.
இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்வது இந்திய கிரிக்கெட்டுக்கு கௌரவ பிரச்சினையாக மாறிவிட்டது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒருவேளை இந்திய அணி தோற்றுவிட்டால் அதுவே ரோகித் சர்மாவுக்கு கடைசி தொடராக இருக்கும் என்று பிசிசிஐ ஏற்கனவே ரோகித் சர்மாவிடம் எச்சரித்து இருக்கிறது.
இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்ல என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். எந்த மாதிரி போட்டியை அணுக போகிறீர்கள் என்பது குறித்து பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும் என ரோகித் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த பிறகு ரோகித் சர்மா இதனை பிசிசிஐ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கடிதம் மூலமாக என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறார் என்பது குறித்து எழுதிக் கொடுக்கவும் பிசிசிஐ நிர்வாகிகள் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதேபோன்று ரோகித் சர்மாவுக்கு பிறகு யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்தும் அவரிடமே கருத்து கேட்கப்பட இருக்கிறது.