Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் வழியை பின்பற்றுங்க.. கிரிக்கெட்டில் எதுவும் நிரந்தரம் அல்ல..கோலி, ரோகித்-க்கு ஆகாஷ் அறிவுரை

மும்பை:சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றினாலும் சில விஷயங்கள் குறித்து இந்திய அணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் ஆன விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு வயது அதிகமாகிறது.

இதில் ரோகித் சர்மா வரும் ஏப்ரல் மாதம் வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பிறகு ரோகித் சர்மா ஓய்வு முடிவை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அறிவிப்பார் என்று செய்திகள் வெளியானது.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

ஆனால் ரோகித் சர்மா அது குறித்து தாம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, செய்தியாளர்களிடம் இருந்து விடைபெறும்போது ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவார் என தெரிகிறது. இது நல்ல விஷயமாக இருந்தாலும், அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றது. இதனால் கிரிக்கெட்டில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் நெடிய பயணம் ஆகும். இந்த இரண்டு ஆண்டுகளில் தங்கமாக இருந்தாலும் அது நெருப்பை சந்தித்தே ஆக வேண்டும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இளம் வீரராக ஆவப்போவதில்லை. உங்களுக்கு வயது ஏறிக்கொண்டு இருக்கும். உங்களுக்கு ராகுல் டிராவிட்டை நான் எடுத்துக்காட்டாக கூற விரும்புகின்றேன். டிராவிட்டுக்கு வயதாக வயதாக அவர் தனது பயிற்சியை அதிகரித்துக் கொண்டே சென்றார்.

அப்போது பலரும் நீங்கள் இளம் வீரராக இருந்தபோது கூட இவ்வளவு பயிற்சி செய்யவில்லையே. இப்போது ஏன் செய்கிறீர்கள் என கேட்டதற்கு, எனக்கு வயது ஆகி சென்று கொண்டிருக்கிறது நான் பயிற்சி செய்யவில்லை. என்னுடைய உடல் தகுதியை பேணி காக்க தான் இந்த பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன் என்று கூறினார். எனவே விராட் கோலியின் ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டை பின்பற்ற வேண்டும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இன்னும் நிறைய பயிற்சி செய்து உங்கள் உடல் தகுதியை உறுதி செய்ய வேண்டும் அடுத்து 2027 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. அதில் இந்த இரண்டு ஜாம்பவான்கள் விளையாடுவது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் மீண்டும் சொல்கிறேன் இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட நெடிய பயணம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 11, 2025, 20:09 [IST]
Other articles published on Mar 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+