Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ்.. உங்களுக்கு இவ்வளவு பொறாமை இருக்க கூடாது.. இது ரொம்ப தப்பு..வெளுக்கும் கோலி ரசிகர்கள்

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு 140 கோடி இந்திய ரசிகர்களும் மகிழ்ச்சி உற்சாகத்தில் இருந்தனர். பலர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்படி கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் சொன்ன ஒரு வாழ்த்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ், மிகச் சிறப்பான ஆட்டம். மிக சிறந்த அணி. ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் தொடுவதெல்லாம் தங்கமாக மாறுகிறது.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

ஐசிசி தொடர்களில் எல்லாம் கில் ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்காக நின்று விளையாடுகிறார்கள். ஜடேஜா, குல்தீப், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தங்களுடைய பவுலிங் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

முகமது சமி இறுதிப்போட்டியில் ரன்களை வாரி வழங்கினாலும் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது என்று யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார். அணியில் விளையாடிய 10 வீரர்கள் பெயரை குறிப்பிட்ட யுவராஜ் சிங், விராட் கோலியின் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். விராட் கோலி உடன், அப்படி உங்களுக்கு என்ன கோபம்? விராட் கோலி இந்த தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். இறுதிப்போட்டியில் மட்டும்தான் அவர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இப்படி இருக்கும் போது விராட் கோலியை ஏன் நீங்கள் வாழ்த்தாமல் விட்டு விட்டீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதலில் தோனி மீது கோபமாக இருந்த நீங்கள் தற்போது விராட் கோலி மீது கோபமாக இருக்கிறீர்களா என்று கோலி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சாடி வருகின்றனர். கோலியை வேண்டுமென்றே புறக்கணித்து இருப்பதாகவும், விராட் கோலி இல்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இருக்காது என்றும் அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, March 11, 2025, 18:28 [IST]
Other articles published on Mar 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+