Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி திமிங்கலம் இப்படி சாத்தியமாகும்? சாம்பியன்ஸ் டிராபி குறித்து காமெடியான ரவி சாஸ்திரி கணிப்பு

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 அணிகள் பங்கேற்பதால் இந்த தொடரில் அரை இறுதிக்கு செல்ல போவது யார் என்பது குறித்து தீர்மானம் செய்யவே கடும் சிரமமாக இருக்கும். இதில் வங்கதேசத்தைத் தவிர மற்ற ஏழு அணிகளும் ஓரளவுக்கு பலமான அணிகள் தான்.

வங்கதேசம் கூட சில நாட்களில் பல பெரிய அணிகளுக்கு கடும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நியூசிலாந்து ஆகிய அணிகளும் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் பங்கு பெறுகிறது.

champions trophy india vs pakistan rohit sharma virat kohli

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு செல்லும். இந்த சூழலில் இந்திய அணி வீரர்கள் கணிப்பை வெளியிடுவதாக கூறி தவறான அணிகளை தேர்வு செய்திருப்பது தான் தற்போது மிகப்பெரிய நகைச்சுவையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது ஒரு பிரிவில் இருந்து இரண்டு அணிகள் தான் அரை இறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கும்போது, ரவி சாஸ்திரி, ஹரபஜன் சிங் ஆகியோர் தேர்வு செய்யும் அரை இறுதி அணியில் ஒரே பிரிவில் இருந்து மூன்று அணிகள் இடம்பெற்றுள்ளன. ரவி சாஸ்திரி இது குறித்து வெளியிட்டுள்ள கணிப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என கூறியிருக்கிறார்.

இதில் இந்தியா ஏ பிரிவில் இருந்தும் பாக்கி 3 அணிகள் பி பிரிவிலிருந்தும் வந்திருக்கிறது. இதேபோன்று ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள கணிப்பில், இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை தேர்வு செய்திருக்கிறார்.

இதில் ஆஸ்திரேலியா ஒரு பிரிவிலிருந்தும் பாக்கி 3 அணிகளும் மற்றொரு பிரிவிலிருந்தும் ஹர்பஜன் தவறுதலாக தேர்வு செய்துள்ளார். இதை குறிப்பிட்டு இருக்கும் ரசிகர்கள் எப்படி திமிங்கலம் ஒரே குரூப்பில் இருந்து மூன்று அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Monday, February 3, 2025, 17:49 [IST]
Other articles published on Feb 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+