Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. இந்தியா-பாக். பைனலில் வெறும் 30 வினாடிக்கு டிவி விளம்பர கட்டணம் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி பைனலின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 30 வினாடி விளம்பரம் செய்ய ரூ.1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2007ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதின.
இதன்பிறகு, 10 வருடங்கள் கழித்து ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் இவ்விரு அணிகளும் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோத உள்ளதால் நாடு முழுக்க ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலை செய்கிறது.

ரூ.1 கோடிப்பே

ரூ.1 கோடிப்பே

இந்த போட்டியை பல கோடி ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள் என்பதால் விளம்பர கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாம். 30 வினாடிகளுக்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரப்பூர்வம்

அதிகாரப்பூர்வம்

இந்தியா-பாக். போட்டியையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், டிவி விளம்பர கட்டணம் 10 மடங்கு உயர்ந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிிவித்துள்ளது.

பத்து மடங்கு

பத்து மடங்கு

பெரும்பாலான இந்தி டிவி ஷோக்களில் 30 வினாடிகளுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு விளம்பர கட்டணம் வாங்கப்படுகிறது. ஆனால், இப்போட்டிக்காக அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.

பலருக்கும் லாபம்

பலருக்கும் லாபம்

இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதுவது ஐசிசி, பிசிசிஐ, விளம்பரதாரர்கள், டிவி சேனல்கள் மட்டுமின்றி சூதாட்ட தரகர்களுக்கும் கொண்டாட்டமான விஷயம். அவர்களும் ரூ.2000 கோடி மதிப்பில் சூதாட்டத்தில் குதித்துள்ளார்கள்.

Story first published: Saturday, June 17, 2017, 11:28 [IST]
Other articles published on Jun 17, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+