For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் யார்?

மும்பை : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது மிகப்பெரிய தொடர் என்றால் அது சாம்பியன்ஸ் கோப்பை தான். உலகின் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த தொடர் ஒரு காலத்தில் நாக் அவுட் தொடராக நடைபெற்றது. அதன் பிறகு ரவுண்ட் ராபின் முறையில் தொடர் நடந்தது.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்த தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்தது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது.

champions trophy india cricket team rohit sharma virat kohli

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய கங்குலி 665 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 73 ஆகும்.மூன்று சதம் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்ககாரா. 22 போட்டிகளில் விளையாடி உள்ள சங்ககாரா மொத்தமாக 683 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 37 ஆகும். சங்ககாரா ஒரு சதம், 4 அரை சதம் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான்.

பத்து போட்டிகளில் விளையாடிய தவான் 701 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 77 என்ற அளவில் இருக்கிறது. இதில் மூன்று சதம் மூன்று அரை சதம் ஆகியவற்றை தவான் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் ஜெயவர்த்தனே 22 போட்டியில் விளையாடியுள்ள ஜெயவர்த்தனே, மொத்தமாக 742 ரன்களை அடித்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 41 என்ற அளவில் இருக்கிறது. ஜெயவர்த்தனே ஐந்து அரை சதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில். கெயில் 17 போட்டிகள் விளையாடி மொத்தமாக 791 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 52 ஆகும்.

இதில் மூன்று சதம், ஒரு அரை சதம் அடங்கும். இந்திய அணியின் ஸ்டார் வீரரான கோலி இந்த பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். அவர் 13 போட்டிகளில் 529 ரன்கள் அடித்திருக்கிறார். கோலி இந்த தொடரில் இதுவரை ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. இதேபோன்று ரோகித் சர்மா 14-ஆம் இடத்தில் இருக்கிறார். அவர் பத்து போட்டியில் விளையாடி 482 ரன்கள் அடித்திருக்கிறார் இதில் ஒரு சதம், 4 அரை சதம் அடங்கும்.

Story first published: Tuesday, January 14, 2025, 8:46 [IST]
Other articles published on Jan 14, 2025
English summary
Champions Trophy - Top 5 Batsman Who scored Most runs in the Tournament சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் யார்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+