Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள் யார்?

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கிறது.

இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய டாப் 5 பவுலர்கள் யார் என்பதை பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் யாருமே எதிர்பாராத வகையில் நியூசிலாந்து வீரர் கையில் மில்ஸ் இருக்கிறார்.

champions trophy india cricket team rohit sharma virat kohli

மில்ஸ் இதுவரை 15 போட்டியில் விளையாடி மொத்தமாக 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் மலிங்கா. இதுவரை 16 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை வீரர் மலிங்கா,மொத்தமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். இதுவரை 17 போட்டிகளில் விளையாடிய முரளிதரன் மொத்தமாக 24 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் பிரட்லி, இதுவரை 16 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடியுள்ள பிரட்லி மொத்தமாக 22 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத். இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய அவர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஐந்தாவது இடத்தை இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் பகிர்ந்து இருக்கிறார். இவர் 12 போட்டிகள் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்த ஒரு இந்திய பவுலரும் இல்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றிருக்கிறார். ஜடேஜா ஒட்டுமொத்தமானவர்கள் பட்டியலில் 14வது இடத்தை பிடித்திருக்கிறார். இதே போன்று 19-வது இடத்தை ஜாகிர் கான் பிடித்திருக்கிறார்.

ஜாகிர் கான் 9 போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை சச்சின் டெண்டுல்கர் பிடித்து இருக்கிறார். 16 போட்டியில் விளையாடிய டெண்டுல்கர் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதேபோன்று ஹர்பஜன் 14 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 13 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Story first published: Tuesday, January 14, 2025, 8:55 [IST]
Other articles published on Jan 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+