#INDvsWI அணி வீரர்கள் தேர்வில் ஒரு ஆச்சர்யம்.. ! தமிழக வீரருக்கு வாய்ப்பு.. 2வது பந்தில் விக்.
புளோரிடா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் விக்கெட்டையும் சாய்த்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் மூன்று டி 20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் நடைபெறும் டி 20 தொடரின் முதல் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்கி இருக்கிறது. அதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தமிழக வீரர்
போட்டிக்கான இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாஹர் சகோதரர்களுக்கு (அதாவது தீபக் சாஹர், ராகுல் சாஹர்) இடம் கிடைக்க வில்லை. மணீஷ் பாண்டே, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கலீல் அஹமது, க்ரூணல் பாண்டியா போன்ற இளம் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

யார்? யார்?
போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கலீல் அஹமது.

வீரர்கள் பட்டியல்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்: ஜான் கேம்பெல், ஈவன் லீவிஸ், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெய்ட்மர், கெய்ரன் பொல்லார்டு, ரோவ்மன் பாவல், கார்லஸ் பிராத்வொய்ட், சுனில் நரைன், கீமோ பவுல், செல்டான் காட்ரல், ஓஸ்னே தாமஸ்.

திருப்புமுனை
இதையடுத்து, முதலில் பந்துவீச களம் இறங்கியது இந்திய அணி. முதல் ஓவரே வாய்ப்பு கிடைத்த வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்தது. முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் அருமையான திருப்புமுனை.

அசத்திய வாஷிங்டன்
தொடக்க வீரர் கேம்ப்பெல் டீப் மிட் விக்கெட் திசையில் விளாசினார். ஆனால், அது கேட்சாக மாறி, பாண்டியா கையில் புகுந்தது. அணியின் ஸ்கோர் தொடங்கும் முன்னே விக்கெட் கணக்கை தொடங்கி வைத்த வாஷிங்டன் சுந்தருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications