For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேர த்ரில்.. பதட்டம்.. ஹைதராபாத்தை காலி செய்த சிஎஸ்கே.. அசால்ட் வெற்றி!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் த்ரில்லாக 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் பஞ்சாப் 4 வெற்றி 1 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது.

2வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

இரண்டு வலுவான அணிகள்

இரண்டு வலுவான அணிகள்

ஹைதராபாத் அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் சென்னை அணி பிராவோ, வாட்சன் போன்ற சிக்ஸர் ஹீரோக்கள் மூலம் மிகவும் வலுமையான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. இதனால் இந்த போட்டி இப்போதே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

மாற்றம்

மாற்றம்

இந்த போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத் அணியில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை, அவருக்கு பதில் ரிக்கி களமிறங்கியுள்ளார். சென்னை அணியில் தாஹிர் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக டு பிளசிஸ் அணிக்கு வந்துள்ளார்.

முதல் பேட்டிங்

முதல் பேட்டிங்

தற்போது இந்த போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச முடிவெடுத்தது. சென்னை அணி பேட்டிங் களமிறங்குகியது. சென்னை அணி முதலிலேயே வரிசையாக வாட்சன், டு பிளசி விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன்பின் வந்த ரெய்னா, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடினார்கள். களத்தை புரிந்து கொண்டு, பின் பொறுமையாக ஸ்கோரை உயர்த்தினார்கள்.

சூப்பர் பார்ட்னர்ஷிப்

சூப்பர் பார்ட்னர்ஷிப்

அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னா அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். கடைசி நேரத்தில் டோணியும் அதிரடி காட்டி 12 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். இதனால் சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

வெற்றியை நோக்கி

வெற்றியை நோக்கி

அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் ஆரம்பத்திலேயே சொதப்ப தொடங்கியது. புதிதாக களமிறங்கிய ரிக்கி மற்றும் மனிஷ் பாண்டே டக் அவுட் ஆனார்கள். தீபக் ஹூடா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்த நிலையில் ஹைதராபாத் 4 விக்கெட் இழந்து 12 ஓவருக்கு 83 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. சென்னையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் நிதானமாக ஆடியது. கேன் வில்லியம்சன் அதிரடியாக 84 ரன்கள் எடுத்தார்.

வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி

இந்த நிலையில் கடைசி பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். மிகவும் எளிதாக முடிய வேண்டிய போட்டி த்ரில்லாக சென்றது. இந்த நிலையில் கடைசி பந்தில் ஹைதராபாத் இரண்டு ரன்கள் அடிக்க சென்னை அணி வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் த்ரில்லாக 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 22, 2018, 19:57 [IST]
Other articles published on Apr 22, 2018
English summary
Chennai faces Hyderabad in IPL 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X