Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்.: தொடரும் சென்னை அணியின் வெற்றி நடை- மும்பையை வீழ்த்தியது!!

துபாய்: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று வெற்றி நடை போட்டு வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மும்பையில் ஜஸ்பிரித் பம்ராவுக்கு பதிலாக சிதம்பரம் கவுதம் சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மைக் ஹஸ்சி, ஆதித்ய தாரே ஆகியோர் களமிறங்கினர்.

ஹஸ்சி 1 ரன்னில் அவுட்

ஹஸ்சி 1 ரன்னில் அவுட்

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செம அதிர்ச்சி காத்திருந்தது. மைக் ஹஸ்சி 7 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஒரே ஒரு ரன் எடுத்து கிளீன் போல்டு ஆனார்.

ஆதித்ய தாரே 23 ரன்கள்

ஆதித்ய தாரே 23 ரன்கள்

மற்றொரு தொடக்க வீரர் ஆதித்ய தாரே 19 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

மீட்ட போராடிய கோரி - ரோகித் ஷர்மா

மீட்ட போராடிய கோரி - ரோகித் ஷர்மா

இதன் பின்னர் கோரி ஆண்டர்சனும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனாலும் பெரும் போராட்டமாகத்தான் இருந்தது. 10 ஓவர் முடிவடைந்த நிலையில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 57 ரன்களே எடுத்திருந்தது.

பிற்பாதியில் வேகம்..

பிற்பாதியில் வேகம்..

கடைசி 10 ஓவர்களில் ரன்களைக் குவிப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணி வேகம் காட்டியது. அந்த அணியின் ஸ்கோர் 109 ரன்களை எட்டிய போது கோரி ஆண்டர்சன் அவுட் ஆனார். அவர் 31 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

ரோகித் ஷர்மா அரைசதம்

ரோகித் ஷர்மா அரைசதம்

அரைசதம் அடித்த கையோடு ரோகித் ஷர்மா அவுட் ஆனார். அவர் 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

19 வது ஓவரில் 3 விக்கெட்டுகள்

19 வது ஓவரில் 3 விக்கெட்டுகள்

19-வது ஓவரை மொகித் ஷர்மா வீசி 3 விக்கெட்டுகளை அள்ளினார் பொல்லார்ட் 12 ரன்களிலும் அம்பத்தி ராயுடு 1 ரன்னிலும் அவுட் ஆகினர். ஹர்பஜன்சிங் டக் அவுட் ஆனார்.

20 ஓவரில் 141 ரன்கள்

20 ஓவரில் 141 ரன்கள்

20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

மொகித்-4 விக்கெட்டுகள்

மொகித்-4 விக்கெட்டுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொகித் ஷர்மா 4 விக்கெட்டுகளும், ல்பனாஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

சென்னை அணி வேகம்

சென்னை அணி வேகம்

142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித், 22 பந்துகளில் 4 சிக்சர்கள் அடித்த கையோடு 29 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் ரெய்னா 1 ரன்னில் அவுட் ஆனார்.

மெக்கல்லம் அபாரம்

மெக்கல்லம் அபாரம்

ஆனால் ஸ்மித்துடன் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் அபாரமாக விளையாடி அரைசதத்தை கடந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இதன் பின்னர் மெக்கல்லமும், கேப்டன் டோணியும் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெக்கல்லம் 71 ரன்கள்

மெக்கல்லம் 71 ரன்கள்

பிரன்டன் மெக்கல்லம் 53 பந்துகளை எதிர்கொண்டு 71 ரன்களை எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். கேப்டன் டோணி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

சென்னைக்கு 3வது வெற்றி

சென்னைக்கு 3வது வெற்றி

ஏற்கனவே டெல்லி, ராஜஸ்தான் அணிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்து இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியை எதிர்கொண்டது சென்னை அணி. தற்போது மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி 3வது வெற்றியைப் பெற்றுள்ளது.

மும்பை தொடர் தோல்வி

மும்பை தொடர் தோல்வி

நடப்பு தொடரில் இதுவரை சந்தித்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Story first published: Saturday, April 26, 2014, 9:57 [IST]
Other articles published on Apr 26, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+