Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடியாக ஆடிய சென்னை.. ஹைதராபாத்தை வீழ்த்தி கெத்து வெற்றி

Recommended Video

ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை கெத்து வெற்றி

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடைசியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெ்ற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றி 2 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 7 வெற்றி 4 தோல்வியுடன் இருக்கும் சென்னை அணி உள்ளது. தற்போது சென்னை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது.

Chennai playing against Hyderabad in IPL 2018

ஹைதராபாத் அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் சென்னை அணி பிராவோ, வாட்சன் போன்ற சிக்ஸர் ஹீரோக்கள் மூலம் மிகவும் வலுமையான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. இதனால் இந்த போட்டி இப்போதே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டி தற்போது புனே மைதானத்தில் தொடங்கியது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. ஹைதராபாத் அணியில் யூசுப் பதான் இடம்பெறவில்லை, அதற்கு பதிலாக ஹூடா களமிறங்கியுள்ளார். சென்னை அணியில் கார்ன் சர்மா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணிக்கு வந்துள்ளார்.

இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச முடிவெடுத்தது. ஹைதராபாத் அணி பேட்டிங் களமிறங்குகியது. ஹைதராபாத் முதலில் பேட்டிங் 20 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 179 ரன்கள் எடுத்தது.

தவான் 79 ரன்கள் எடுத்தார். கேன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்தார். சென்னைக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் இறங்கிய சென்னை அதிரடியாக ஆடினார்.

வாட்சன் 57 ரன்கள் எடுத்தார். ராயுடு அதிரடியாக 100 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை எளிதாக 19 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி பெற்றுள்ளது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Sunday, May 13, 2018, 19:33 [IST]
Other articles published on May 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+