Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO: சச்சின்... சச்சின்... ! பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி

Recommended Video

Sachin 46th Birthday | கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு பிறந்த நாள்: குவியும் வாழ்த்துகள்!

சென்னை: சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். தனது 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடிய சச்சின் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து கடந்த 2013ல் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின் சர்வதேச டெஸ்டில் இதுவரை எந்த வீரரும் விளையாடாத அளவு 200வது டெஸ்டில் பங்கேற்று 2013ல் நவம்பர் 16ம் தேதி, 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியா விடை கொடுத்தார்.

சாதனைகளுக்கு ஓய்வில்லை

சாதனைகளுக்கு ஓய்வில்லை

அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவரது சாதனைகள் ஓய்வு பெறவில்லை. இன்றும் கிரிக்கெட் உலகம் பேசிக் கொண்டு தான் இருக்கிறது. என்றும் பேசிக் கொண்டே தான் இருக்கும். ஏன் என்றால் அது சச்சின்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

சச்சினுக்கு இன்று பிறந்த நாள். மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் ஜாம்பவானின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில் உற்சாகம் கரை புரண்டது.

ரசிகர்கள் வாழ்த்து

அதன் முக்கிய அம்சமாக, சென்னை அணியின் ரசிகர்களும் சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். சென்னை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று முடிந்தது.

விசில் போடு ஆர்மி

விசில் போடு ஆர்மி

போட்டியை காண வந்திருந்த சென்னை அணியின் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சச்சின்,சச்சின் என்று சேப்பாக்கம் மைதானத்தில் முழக்கமிட்டனர். அவர்களின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Story first published: Wednesday, April 24, 2019, 17:08 [IST]
Other articles published on Apr 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+