Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ட்ரெய்னிங் போய்க்கிட்டு இருக்கு... இப்போ ஜெர்சியையும் வெளியிட்டிருக்காங்க... சூப்பர் சிஎஸ்கே!

மும்பை : ஐபிஎல் 2020 தொடரில் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே-ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் திட்டத்துடன் சிஎஸ்கே களத்தில் இறங்கியுள்ளது.

அனைத்து அணிகளுக்கும் முன்னதாகவும் தங்களது பயிற்சி போட்டிகளை துவக்கியுள்ள சிஎஸ்கே, தற்போது ஜெர்சியையும் சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி அனைத்து அணிகளும் ஏறக்குறைய தங்களது பயிற்சி போட்டிகளை துவங்கியுள்ளன, அல்லது அறிவித்துள்ளன. தொடர் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே சிஎஸ்கே தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

தோனி பங்கேற்பு

தோனி பங்கேற்பு

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பயிற்சி முகாம்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வந்தன. இந்த முகாமில் கேப்டன் எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு மற்றும் அணியின் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

சுரேஷ் ரெய்னா பங்கேற்பு

சுரேஷ் ரெய்னா பங்கேற்பு

இந்த தொடரில் ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் இந்த பயிற்சி முகாம் தற்போது மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27, 28 தேதிகளில் பயிற்சிகள் துவங்கவுள்ளதாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த முகாமில் சுரேஷ் ரெய்னாவும் பங்கேற்கவுள்ளார்.

சிஎஸ்கே வெளியீடு

இந்நிலையில் தற்போது தனது புதிய ஜெர்சியை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இதில் தோள்பட்டையில் இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்தும்வகையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி மஞ்சள் நிறத்தில் கண்ணை கவரும்வகையில் ஜெர்சி அமைந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வெளியிட்ட தோனி

மேலும் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி புதிய ஜெர்சியை வெளியிடும்வகையிலும் சிஎஸ்கே வீடியோ வெளியிட்டுள்ளது. பேக்கிலிருந்து ஜெர்சியை எடுக்கும் தல தோனி, அதை அறிமுகப்படுத்திவிட்டு, மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க என்றும் அவரது மொழியில் கூறுவது சிறப்பாக உள்ளது.

Story first published: Thursday, March 25, 2021, 11:25 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+