CSK vs MI:முதல் பிளே ஆப் சுற்று... டுபிளெசிஸ், ரெய்னா, வாட்சன் அவுட்..! தடுமாறும் சென்னை
Recommended Video
சென்னை:ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய சென்னை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
12-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் இறங்கி உள்ளன.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்திருக்கிறது. சென்னையில் அணியில் காயம் காரணமாக கேதர் ஜாதவ் இந்த போட்டியில் இல்லை. அவருக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெக்லகேனுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டுபிளெசிசும், வாட்சனும் களம் இறங்கினர். முதல் ஓவரில் ஒரேயொரு ஒரு ரன் தான் கிடைத்தது. 2வது ஓவரில் சென்னை அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
6 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர் டுபிளெசிஸ் சாஹர் பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சின்ன தல ரெய்னாவும் ஏமாற்றினார். அவர் 5 பந்துகளில் ஜெயந்த் ஜாதவ் பந்தில் கேட்சானார்.
அதன் பிறகு வாட்சனும் பெரிய அளவு சோபிக்கவில்லை. அவர் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 6 ஓவர்களுக்குள் சென்னை அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விக்கெட்டுகள் வீழ்ந்ததால் சென்னை ரசிகர்கள் சோகமடைந்தனர்.


Click it and Unblock the Notifications