For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு எதிராக சீறிப் பாய புது "தோட்டா" தயார்.. அணியில் இணையும் தோனியின் "யானை பலம்"

துபாய்: மும்பைக்கு எதிரான முதல் போட்டியின் சென்னை அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது.

இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 13 போட்டிகள் துபாயில்

13 போட்டிகள் துபாயில்

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

 பிளே ஆஃப் இடம்

பிளே ஆஃப் இடம்

வழக்கம் போல் முதல் போட்டியில் சென்னையையும், மும்பையையும் மோதவிட்டு, ரசிகர்களையும் ஒட்டுமொத்த கவனத்தையும் ஐபிஎல் பக்கம் ஈர்க்க ஆயத்தமாகி வருகிறது பிசிசிஐ. கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்படுவதற்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 218 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து அபார வெற்றிப் பெற்றது. பொல்லார்ட் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக அந்த போட்டியில் திரும்ப வந்தது அந்த அணிக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் அந்த அணி நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.062. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதி.

Recommended Video

Dhoniயின் வெறித்தனமான Net Practice Session | IPL 2021 | CSK | OneIndia Tamil
 அபார ரன் ரேட்

அபார ரன் ரேட்

சென்னை அணிக்கு இந்த போட்டி மெகா தோல்வியாக அமைந்தது. அதில் மட்டும் வென்றிருந்தால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஆக்கிரமித்திருக்கும். ஆனால், பொல்லார்டின் காட்டடி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. எனினும், சென்னை அணியை பொறுத்தவரை, இந்த சீரிஸில் அபார தொடக்கம் கிடைத்துள்ளது. கடந்த சீசனில் இதே அமீரகத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முதலாக ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், இந்த 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. தற்போது சிஎஸ்கே 10 புள்ளிகள் வைத்திருக்கிறது. மேற்கொண்டு இன்னும் 6 புள்ளிகள் சேர்த்தாலே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடலாம். அதாவது, இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே போதும். கைவசம் 7 போட்டிகள் மீதமுள்ளன.

 மிஸ்ஸாகும் பிளசிஸ், சாம்

மிஸ்ஸாகும் பிளசிஸ், சாம்

இந்நிலையில், மும்பைக்கு அணிக்கு எதிராக தேர்வு செய்ய வாய்ப்புள்ள சென்னை அணியின் பிளேயின் லெவன் குறித்து பார்ப்போம். இதில், சென்னை அணியின் பேரிடி என்பது டு பிளசிஸ் காயம் தான். கரீபியன் பிரீமியர் லீக்கில் காயத்தை வாண்ட்டடாக சம்பாதித்துக் கொண்ட டு பிளசிஸ், இப்போது சிஎஸ்கே அணியில் களமிறக்கப்படுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. அதேபோல், குவாரண்டைனில் இருக்கும் சாம் கர்ரனும் இப்போட்டியில் விளையாட மாட்டார். ஸோ, இத்தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் டுபிளசிஸும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாம் கர்ரனும் பங்கேற்க போவதில்லை.

 யானை பலம்

யானை பலம்

ஸோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாதிரி பிளேயிங் இப்படியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (c & wk), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ங்கிடி, ஜே ஹேசில்வுட் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, வழக்கமான ஓப்பனர் டு பிளசிஸ் மிஸ் ஆவதால், ராபின் உத்தப்பா அணியில் சந்தேகத்துக்கு இடமின்றி ஓப்பனிங் களமிறங்கலாம். ஒன் டவுன் மொயீன் அலி, டூ டவுன் ரெய்னா, பிறகுஅம்பதி ராயுடு, ஜடேஜா, தோனி என்று அடுத்தடுத்து பேட்டிங் ஆர்டர் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய ஷர்துல் தாகூர் மீது, இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இணைந்திருப்பது தோனிக்கு யானை பலம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. முதல் பாதியில், இவரை மிஸ் செய்த சென்னை அணி, இப்போது அவரது சர்வீஸை பயன்படுத்த தயாராக உள்ளது. இவரைப் போன்ற "Speedster" இல்லாததால் தான், டெல்லியிடமும், மும்பையிடமும் தோனி படை தோற்றது.

Story first published: Friday, September 17, 2021, 18:31 [IST]
Other articles published on Sep 17, 2021
English summary
chennai super kings playing xi vs mumbai indians ipl 2021 - சிஎஸ்கே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+