Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் ப்ளேயிங் லெவனோ.... அசுர பலத்தில் சி.எஸ்.கே... ரசிகர்களின் கணிப்பு

சென்னை: ஐபிஎல் தொடரில் 2 முக்கிய வீரர்களை ஏலம் எடுத்துள்ளதால் சென்னை அணியில் கள வீரர்கள் 11 பேர் யாராக இருக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கிருஷ்ணப்பா கௌதம், மௌயின் அலி, புஜாரா ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த முறை சி.எஸ்.கே வின் ப்ளேயிங் 11 யார் யார் என்பதை ரசிகர்கள் கணித்துள்ளனர்.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. கடந்த முறை மோசமான ஆட்டத்தால் சென்னை அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த முறை ஆரம்பம் முதலே அதிரடி காட்ட சி.எஸ்.கே திட்டமிட்டுள்ளது.

புது அணி

புது அணி

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேதர் ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்டோர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்ட மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 கள வீரர்கள்

கள வீரர்கள்

இந்த சீசனுக்கான ப்ளேயிங் 11: ருத்ராஜ் கெய்க்வாட், டூப்ளசீஸ், ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரண், மொயின் அலி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹீர் என ரசிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

பலம்

பலம்

டாப் ஆர்டரில் கெயிக் வாட், டூப்ளசீஸ் இருப்பதால் பலமாக உள்ளது. மிடில் ஆர்டரில் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி வலு சேர்க்கிறது. அதே போல ஆல்ரவுண்டர் ஜடேஜா, சாம் கரண், மொயின் அலியும் பந்துவீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹீர், ஷர்துல் தாக்கூர் பொருந்தியுள்ளனர்.

Story first published: Saturday, February 20, 2021, 8:37 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+