For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 
MI vs CSK : ரெய்னாவை சாய்த்த பொல்லார்டின் மரண கேட்ச்.. ஐபிஎல் பெஸ்ட் கேட்ச் இதுதான்

Recommended Video

ரெய்னாவின் விக்கெட் எடுக்க பொல்லார்ட் பிடித்த அற்புத கேட்ச்

மும்பை: மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 171 ரன்களை நோக்கி களமிறங்கிய சென்னை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ரெய்னாவை அவுட்டாக்கிய பொல்லார்டின் கேட்ச் அற்புதம்.

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் பெகண்ட்ராஃப் , ராகுல் சஹார் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் சாண்ட்னருக்கு பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

1
45771

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

MI vs CSK : என்ன மனுசரய்யா... நீர்..! 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள் MI vs CSK : என்ன மனுசரய்யா... நீர்..! 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள்

170 ரன்கள் குவிப்பு

170 ரன்கள் குவிப்பு

க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது. சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடக்கத்தில் அவுட்

தொடக்கத்தில் அவுட்

இதையடுத்து, சென்னை அணி பெருத்த எதிர்பார்ப்புடன் களம் கண்டது. தொடக்கத்திலே அந்த அணிக்கு அதிர்ச்சி. அம்பத்தி ராயுடு டக் அவுட்டாகி வெளியேறினார்.

ரெய்னாவின் 16

ரெய்னாவின் 16

அவரை தொடர்ந்து வாட்சனும் 5 ரன்களில் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ரெய்னாவும், ஜாதவும் கைகோர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சின்ன தல ரெய்னா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த அற்புதம்

அந்த அற்புதம்

ரெய்னாவின் அந்த விக்கெட் அற்புதம். 5வது ஓவரில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த ஓவரின் இறுதி பந்தை ரெய்னா தூக்கி அடிக்க சிக்சர் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

பொல்லார்டு கேட்ச்

பொல்லார்டு கேட்ச்

தரையில் இருந்து ஜம்ப் பண்ணிய பொல்லார்டு, ஒரு கையில் சிக்சருக்கு போக வேண்டிய அந்த பந்தை தாவி பிடித்து உருள்கிறார். ரெய்னாவை பெவிலியனுக்கு திருப்பி அனுப்புகிறார்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

வாட் எ கேட்ச்... என்று மைதானமே அலறுகிறது. என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் புரியவே சில விநாடிகள் நீடித்தது. பின்னர் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் அந்த காட்சிகள் ரீப்ளே செய்யப்பட மைதானத்தில் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.

சூப்பர் கேட்ச்

சூப்பர் கேட்ச்

இந்த ஐபிஎல் தொடரின் சூப்பர் கேட்ச் என்றால் இதுதான். முக்கிய விக்கெட்டை வீழ்த்திய மும்பை அணிக்கு அந்த தருணம் தன்னம்பிக்கையை அளித்தது எனலாம்.

Story first published: Wednesday, April 3, 2019, 23:31 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
Chennai super kings struggling to get 171 runs against Mumbai Indians.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X