For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2019:தோற்றாலும்.. லீக், பிளே ஆப்பில் கலக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பைனலில் நுழைந்தது எப்படி?

Recommended Video

IPL 2019 Finals Chennai vs Mumbai | 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை

ஹைதராபாத்:ஐபிஎல் 2019 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி இறுதிப்போட்டியில் 1 ரன்னில் தோற்றது. இருப்பினும், இந்த தொடரில் அந்த அணி லீக் போட்டியில் இருந்து எப்படி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது என்று பார்ப்போம்.

ஒன்றரை மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த ஐபிஎல் திருவிழா முடிந்துவிட்டது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதின. பரபரப்பான போட்டியில் சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது மும்பை.

மும்பை அணிக்கு இது 4வது கோப்பை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி, 1 ரன்னில் தோற்றதால் அதன் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். லீக் போட்டியின் தொடக்கம் முதலே ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது சென்னை அணி. ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எப்படி என்பது இதோ ஒரு பார்வை.

முதல் வெற்றி

முதல் வெற்றி

மார்ச் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதன் பிறகு மார்ச் 26ம் தேதி போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது.

லீக்கில் மும்பையிடம் தோல்வி

லீக்கில் மும்பையிடம் தோல்வி

ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை. அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மும்பை அணியுடன் நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பின்னர், பஞ்சாபை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை.

ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை

ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை

கொல்கத்தா அணியுடன் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும், ராஜஸ்தான் அணியுனான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் சென்னை வென்றது. ஆனால், ஹைதராபாத் அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

சென்னை தோல்வி

சென்னை தோல்வி

பெங்களூர் அணியுடன் நடந்த பரபரப்பான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி சென்னை அணிக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

சிஎஸ்கே தோற்றது

சிஎஸ்கே தோற்றது

ஏற்கனவே லீக் போட்டியில் மும்பை அணியுடன் தோல்வி கண்டிருந்த சென்னை அணி, மீண்டும் மும்பைக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போனது. பின்னர், டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிளே ஆப் சுற்று

பிளே ஆப் சுற்று

மீண்டும் பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பை அணியுடன் நடந்த பிளே ஆப் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பரபரப்பான குவாலிபயர் 2வது சுற்றில் டெல்லி அணியை சாய்த்து சென்னை அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

Story first published: Monday, May 13, 2019, 9:04 [IST]
Other articles published on May 13, 2019
English summary
Chennai super kings travel in ipl 2019 from league to final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X