Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்து காட்டிய கெயில்.. மாஸ் டோணி.. சென்னையை வீழ்த்திய பஞ்சாப்

Recommended Video

4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சென்னை

மொஹாலி: ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று நடந்தது

Chennai Superk Kings faces Kings XI Punjab in IPL 2018

சென்னை அணியில் இருந்த அஸ்வின் தற்போது பஞ்சாப் அணியை வழிநடத்தினார். அஸ்வின் அந்த அணியின் கேப்டனாக வேறு இருக்கிறார். இரு அணிகளும் சம பலத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.

இந்த போட்டி தற்போது மொஹாலி மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. சென்னையில் ரெய்னாவிற்கு பதில் முரளி விஜய் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

பஞ்சாப் அணியில் கெயில் அதிரடியாக ஆடினார். இவர் 33 பந்தில் 66 ரன் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு பஞ்சாப் 197 ரன்கள் எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய சென்னை அணி மிகவும் நிதானமாக ஆடியது. டோணி கடைசி நேர அதிரடியால் அரைசதம் அடித்தார். ஆனாலும் கடைசியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றிபெற்றது.

Story first published: Sunday, April 15, 2018, 23:51 [IST]
Other articles published on Apr 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+