
4வது நாள் ஆட்டம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஸ்பின்னர் ரவி அஸ்வின் அதகளம் புரிந்து வருகிறார்.

5 விக்கெட் சாதனை
முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தலா 3 மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் தனது 28வது 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார். இந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்றாலும் அஸ்வினுக்கு மிகச்சிறந்த பாராட்டுக்கள் குவிந்தன.

29வது 5 விக்கெட் சாதனை
இந்நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது 29வது 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார். மேலும் நேற்றைய இரண்டாவது இன்னிங்சில் சதத்தையும் அடித்து ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை பரிசளித்தார்.

கலக்கல் ஜூகல்பந்தி
ஒரு வருடத்திற்கு பிறகு இந்த போட்டியின்மூலம் நேரடியாக போட்டியை காணும் வாய்ப்பு பெற்ற ரசிகர்களுக்கு அஸ்வினின் இந்த ஆட்டம் மிகச்சிறந்த பரிசாக அமைந்தது. இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளையும் அதிக ரன்களையும் அடித்த வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

அஸ்வினை பொருத்தி கலக்கல்
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட போஸ்டரில் அஸ்வினை பொருத்தி ரசிகர்கள் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இதில் மாசாக காணப்படுகிறார் அஸ்வின். 'சேப்பாக்கத்தில் ஆஷ் அண்ணா' என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் அவரின் சாதனைகளும் கூறப்பட்டுள்ளது.

போஸ்டரை பகிர்ந்த ப்ரீத்தி
இந்நிலையில இந்த போஸ்டரை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் யார் இதை செய்தது என்று பெருமையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மாஸ் போஸ்டர் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து லைக் மற்றும் கமெண்ட்டுகளை செய்து வருகினற்னர்.


Click it and Unblock the Notifications