Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி நீக்கத்தில் ரோகித் பங்கு என்ன? உண்மையை உடைத்த சேத்தன் சர்மா.. இது தான் நிஜமா?

மும்பை : விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி சாம்பியன் கோப்பையையும் வெல்லவில்லை.

இதனால் பிசிசிஐ நிர்வாகிகள், கோலியை கேப்டன் பதவியை விட்டு நீக்க முடிவு எடுத்த நிலையில், விராட் கோலி டி20 கேப்டனாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது என்று கூறி, விராட் கோலியை பிசிசிஐ ஒருநாள் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கியது.

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

இந்த விவகாரத்தில் ரோகித் சர்மாவுக்கும் பங்கு உண்டு என்று விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக, கோலியும், ரோகித்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

 சேத்தன் கருத்து

சேத்தன் கருத்து

இந்த நிலையில் சேத்தன் சர்மாவின் ரகசிய வீடியோவில், இது அனைத்தம் பொய் என்று தெரியவந்துள்ளது. விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக பார்மில் இல்லாத போது ரோகித் சர்மா தான் அவருக்கு ஆதரவு கெடுத்து பேசியதாக சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

விரிசல் இல்லை

விரிசல் இல்லை

மேலும் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த போட்டியும், விரிசலும் இல்லை என்றும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து வந்ததாக சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் கோலியும், ரோகித்தும் அமிதாப் மற்றும் தர்மேந்திரா போல் இருந்ததாகவும் சேத்தன் சர்மா பாராட்டியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இதன் மூலம் விராட் கோலியின் கேப்டன் பதவியின் மீது ரோகித் சர்மா ஆசைப்படவில்லை என்று தெளிவாகி விட்டது. எனினும் இந்த வீடியோவில் சேத்தன் சர்மா, ரோகித் சர்மா தம்மிடம் அடிக்கடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் என சேத்தன் சர்மா கூறியதை பிடித்து கொண்டு சில கோலி ரசிகர்கள் ரோகித் சர்மாவை தாக்கினர்.

பதிலடி

பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா ரசிகர்கள், கேப்டன் தேர்வுகுழத் தலைவரை தொடர்பு கொண்டு அணி தேர்வு குறித்து பேசுவதில் எந்த தவறு இல்லை என்றும், அது தான் கேப்டனின் பணி என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ரோகித் சர்மாவை சேத்தன் சர்மா பெருமையாக பேசியதை கோலி ரசிகர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Story first published: Wednesday, February 15, 2023, 12:14 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+