Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போதையில் உளறிய சேத்தன் சர்மா.. கேமிரா இருந்தும் தெரிந்தே பேசினார்.. வெளியான புதிய தகவல்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் சேத்தன் சர்மா பேசிய வீடியோ ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து பிசிசிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவது ரசிகர்களை மேலும் குழப்பமடைய செய்துள்ளது.

சேத்தன் சர்மா இவ்வளவு பெரிய தவறை செய்தும் பிசிசிஐ நிர்வாகிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடி போதை

குடி போதை

இந்த சம்பவம் வெளிவந்து ஒரு நாள் மேலாகியும் பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கருத்து கூட தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ரகசிய கேமரா பதிவு நடந்தது எப்படி என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் சேத்தன் சர்மா குடிபோதையில் பேசியதுதான் ஹைலைட்டே. ஸ்டிங் ஆப்ரேஷன் என்றால் கேமரா மறைவிடத்தில் இருக்கும். அது தெரியாமல் சம்பந்தப்பட்டவர்கள் பேசுவார்கள்.

தெரிந்தே பேசினார்

தெரிந்தே பேசினார்

ஆனால் சேத்தன் சர்மா பேசிய வீடியோவில் அவர் கேமராவை பார்த்து தான் பல விஷயங்களை கூறுவது போல் தெரிகிறது. இதனால் அவர் குடிபோதையில் தம் மனதில் இருந்த விஷயங்களை உளறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கங்குலி விராட் கோலியை பதவி விட்டு செல்ல வேண்டாம் எனக் கூறினார் போன்ற கருத்துக்கள் எல்லாம் வீடியோ கேமராவுக்காக அவர் பேசினாரா என்று ரசிகர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் கங்குலி தம்மிடம் அப்படி எதுவும் சொல்லவில்லை என விராட் கோலி கடந்த ஆண்டு பேட்டியில் கூறியிருந்தார்.

கங்குலி கோலி விவகாரம்

கங்குலி கோலி விவகாரம்

இதனால் தான் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறோம் எனத் தெரிந்து சேத்தன் சர்மா பல்வேறு விஷயங்களை மாற்றி பேசி இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் கங்குலிக்கு விராட் கோலி பிடிக்காது என்ற கருத்தை அவர் மனதார சொல்லியிருக்கலாம். ஏனெனில் தற்போது கங்குலி பி சி சி ஐ தலைவர் பொறுப்பில் இல்லாததால் அவரை போட்டுக் கொடுக்க சேத்தன் சர்மா இந்த கருத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தவறில்லை

தவறில்லை

இந்த நிலையில் சேத்தன் சர்மா வீரர்கள் ஊசி போட்டுக் கொண்டு உடல் தகுதியை நிரூபிப்பார்கள் என்று கூறிய கருத்திற்கும் மருத்துவ ரீதியில் தவறு இல்லை என்பது தற்போது வெளியாகி உள்ளது. காரணம் காயத்தால் வலியை பொறுத்துக் கொள்ள முடியாத சமயத்தில் இது போன்ற ஊசிகள் போட்டுக் கொள்ளலாம் என்றும் அதற்கு விதியில் அனுமதி இருப்பதாகவும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை எல்லாம் தெரிந்தும் சேத்தன் சர்மா போதையில் தான் உளறி இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, February 16, 2023, 12:00 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+