Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ.. சூதாட்டத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை: அலறும் கிறிஸ் கெயின்ஸ்

Chris Cairns denies his involvement in match-fixing
வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளவர் பிரண்டன் மேக்கல்லம். இவர் தற்போது ஐ.பி.எல்.-7வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

2008ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபடுமாறும், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு தன்னை முன்னாள் வீரர் ஒருவர் அணுகினார் என்று மேக்கல்லம் தெரிவித்திருந்தார். 2008ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குவதற்கு முதல் நாள் கொல்கத்தாவில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து தன்னிடம் அந்த வீரர் பேசினார். ஆனால் தான் சூதாட்டத்தில் ஈடுபட மறுத்து விட்டதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலும் அந்த முன்னாள் வீரர் தன்னை அணுகியதாகவும் தெரிவித்தார்.

பிரண்டன் மேக்கல்லத்தை அணுகிய அந்த முன்னாள் வீரர் நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ் என்று தகவல் வெளியாகியது. இதனை மறுத்து கிறிஸ் கெய்ன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூதாட்ட சர்ச்சையில் எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது. பிரண்டன் மேக்கல்லத்தை அணுகிய அந்த முன்னாள் வீரர் நான் இல்லை. எனது மீதான குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 20, 2014, 14:17 [IST]
Other articles published on May 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+