அதிக சிக்சர்கள்... அப்ரிதியின் சாதனை சமன்... கலக்கிய உலக நாயகன் கெயில்!
Recommended Video

டெல்லி: சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர் அடித்த பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியின் சாதனையை சமன் செய்தார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலக நாயகன் கிறிஸ் கெயில்.
உலகின் எந்த நாட்டில் டி-20 போட்டித் தொடர் நடந்தாலும், அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் கண்டிப்பாக இருப்பார். அதனால்தான், 38 வயதாகும் டி-20 ஸ்பெஷலிஸ்டடான கிறிஸ் கெயில் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.

வெஸ்ட் இண்டீஸில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருதினப் போட்டியில் 5 சிக்சர்களுடன் 66 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார் கிறிஸ் கெயில். இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர்கள் அடித்த பாகிஸ்தானில் ஷாகித் அப்ரிதியின் சாதனையை சமன் செய்தார் கெயில்.
கிறிஸ் கெயில் 443 போட்டிகளில், 513 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அதே நேரத்தில் அப்ரிதி 524 போட்டிகளில் 508 இன்னிங்ஸ்களில் 476 சிக்சர்கள் அடித்துள்ளார்.
கெயில் டி-20களில் 103, ஒருதினப் போட்டிகளில் 271, டெஸ்ட்களில் 98 சிக்சர்கள் அடித்துள்ளார். அப்ரிதி டி-20களில் 73, ஒருதினப் போட்டிகளில் 351, டெஸ்ட்களில் 52 சிக்சர்கள் அடித்துள்ளார்.
அதிக சிக்சர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மெக்கல்லம் 398 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் ஜெயசூர்யா 352 சிக்சர்களை அடித்துள்ளார். இந்தியாவின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி 504 போட்டிகளில் 342 சிக்சர்கள் அடித்து, பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications