For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இந்த விஷயத்தில் நிச்சயம் வெற்றி பெற முடியாது!

By Aravinthan R

Recommended Video

அதிக சிக்சர்கள்...அப்ரிதியை சமன் செய்த கெயில்!- வீடியோ

பாசெட்டர்: அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையாளர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள கிறிஸ் கெய்லை இந்திய வீரர்கள் வீழ்த்துவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. குறிப்பாக இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தோனியால் முடியாது.

அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பாகிஸ்தானின் சஹித் அப்ரிடியோடு பகிர்ந்து கொண்டுள்ளார், கிறிஸ் கெயில். அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விட்ட நிலையில், இன்னும் ஒரு சிக்ஸ் அடித்தால் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் யாராலும் நெருங்க முடியாத, புதிய சாதனை புரிவார் கிறிஸ் கெயில்.

இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை எட்டியுள்ளார் கெயில். அந்த போட்டியில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை பறக்க விட்ட கெயில், 66 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

வங்கதேசத்திற்கு எதிராக

வங்கதேசத்திற்கு எதிராக

அந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய வங்கதேசம் 301 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஐம்பது ஓவர்களில் 283 ரன்கள் மட்டுமே எடுத்தது. பதினெட்டு ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

அப்ரிடியை வீழ்த்த இன்னும் ஒரு சிக்ஸ்

அப்ரிடியை வீழ்த்த இன்னும் ஒரு சிக்ஸ்

அப்ரிடி 524 போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரை விட 81 போட்டிகள் குறைவாக, 443 போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார் கெயில். அடுத்து வரும் ஆகஸ்ட் 1 முதல், வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடர் நடைபெற உள்ளதால், இன்னும் ஒரு சிக்ஸ் மட்டும் அடிக்கும் பட்சத்தில் அப்ரிடியை வீழ்த்தி அதிக சிக்ஸர்கள் அடித்தவர் சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அடிக்கும் அனைத்து சிக்ஸர்களையும் சேர்த்தே இந்த சாதனை கணக்கிடப்படுகிறது.

தோனியால் முடியாது

தோனியால் முடியாது

தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வருபவர்களில் கிறிஸ் கெயில் தவிர்த்து முதல் பத்து இடங்களில் இருப்பவர்கள், இந்தியாவின் தோனி மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே. இதில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் தோனி 504 போட்டிகளில் 342 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஒய்வு பெற்று விட்ட தோனி, இன்னும் சில ஆண்டுகளே சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என்பதால், கெயிலின் சாதனையைத் தொட முடியாது.

ரோஹித் முறியடிப்பாரா?

ரோஹித் முறியடிப்பாரா?

அடுத்து ஏழாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, 292 போட்டிகளில் 291 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். தற்போது 31 வயதாகும் அவர், இன்னும் சில ஆண்டுகள் அனைத்து கிரிக்கெட் வடிவிலும் விளையாடி, அதிக சிக்ஸர்கள் அடித்தால் கிறிஸ் கெயிலை நெருங்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Monday, July 30, 2018, 15:06 [IST]
Other articles published on Jul 30, 2018
English summary
Chris gayle equalled the record for most sixes in international cricket.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+