ஆரம்பமும் அங்க தான்... முடிவும் அங்க தான்..!! தொடங்கிய இடத்தில் முடியும் அவரது பயணம்
Recommended Video
போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் தமது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய கிறிஸ் கெயில், அதே இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.
தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 3 வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் மீண்டும் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் அறிவிப்பு
இந் நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரில் சரியாக விளையாடாத மற்றும் உடற் தகுதியிலும் சரிவர இல்லாத கெயில் அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.

எப்போது ஓய்வு பெறுவார்?
உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவேன் என்று அறிவித்த கெயில் மீண்டும் விளையாடுவேன் என்று கூறியதால் இந்த தொடரோடு ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

1999, செப்.11ல் அறிமுகம்
அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 1999ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகமானார் கெயில். அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக விடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

10,393 ரன்கள் குவிப்பு
எனவே இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரோடு தமது ஓய்வினை அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது. சிக்சர் மன்னன், யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கெயில், 298 ஆட்டங்களில் இதுவரை 10,393 ரன்களை அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில், ஆகஸ்ட் 8ம் தேதி கயனாவில் முதல் ஒருநாள் ஆட்டமும், டிரினாடாடில் 11 மற்றும் 14ம்தேதிகளில் 2வது 3வது போட்டிகளும் நடைபெறும்.


Click it and Unblock the Notifications