Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துணை கேப்டனாக கெயில் நியமனம்.. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிரடி.. இனி எல்லாம் ஜெயம்

ஜமைக்கா:உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் அந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில், ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ ரசல் மற்றும் மூத்த வீரர் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Chris gayle named west indies vice captain for world cup

இந்நிலையில், உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனாக அந்த அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் அறிவிக்கப் பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை அவர் 289 ஒருநாள் ஆட்டங்களில் இடம் பெற்று 10,151 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுபற்றி கெயில் கூறியதாவது:மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடுவது என்பது எனக்கு எப்போதும் பெருமை. மேலும், இது எனக்கு 5 வது உலக கோப்பை இந்த தொடர் எனக்கு ஸ்பெஷலான ஒன்று. அணியின் மூத்த வீரராக, கேப்டன் உள்ளிட்ட வீரர்களுக்கு உதவும் முக்கிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தோனியின் அறிவுரைகள் எவ்வாறு இந்திய அணிக்கு உதவுகிறதோ, அது போன்று அனுபவ வீரரான கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவுவார் என்று அந்த அணி நம்புகிறது. உலக கோப்பை மேற்கிந்திய தீவுகள் ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் ரசல், பூரான், ஹெட்மயர் மற்றும் எவின் லீவிஸ் மற்றும் பிராத் ஒயிட் ஆகியோர் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கான மே.இ. அணி: ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), பெபியன் ஆலன், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெல், ஷன்னோன் கேப்ரியல், கிறிஸ் கெயில், ஹெட்மையர், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், நிகோலஸ் பூரண், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஒஷானே தாமஸ்.

Story first published: Tuesday, May 7, 2019, 12:31 [IST]
Other articles published on May 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+