Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்ளோ பெரிய பர்கர்.... வாழ்நாள்ல முதல்முறையா சாப்புடறேன்... யூனிவர்சல் பாஸ் கொண்டாட்டம்

மாலத்தீவு : கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 தொடர் கடந்த வாரத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நேரடியாக தங்களது நாட்டிற்கு செல்லமுடியாத ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ளனர். கிறிஸ் கெயிலும் தற்போது மாலத்தீவில் உள்ளார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பரவல் காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல்லின் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாலத்தீவில் கெயில்

மாலத்தீவில் கெயில்

இந்தியாவில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாத நிலையில் அவர்கள் தற்போது மாலத்தீவில் 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயிலும் தற்போது மாலத்தீவில் உள்ளார்.

கெயில் ருசித்த பெரிய பர்கர்

ஆனால் அவர் அவர் இருப்பது விடுமுறை கொண்டாட்டத்திற்காக. அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார். தொடர்ந்து தனது கொண்டாட்டங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் கெயில். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் சாப்பிட்டு மகிழ்ந்த மிகப்பெரிய பர்கர் குறித்து சிலாகித்துள்ளார்.

கொண்டாட்டத்தில் கெயில்

கொண்டாட்டத்தில் கெயில்

தான் இதுவரை இவ்வளவு பெரிய இறால் பர்கரை சாப்பிட்டதில்லை என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கொண்டாட்டத்தையும் அந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். எப்போதும் தன்னுடைய சூழலை சிறப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்பவர் யூனிவர்சல் பாஸ் கெயில்.

1000 சிக்ஸ்கள் சாதனை

1000 சிக்ஸ்கள் சாதனை

இந்த சீசனில் 8 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கெயில், 178 ரன்களை அடித்திருந்தார். இதில் அதிகபட்சமாக 46 ரன்களை அடித்திருந்தார். ஆனால் அரைசதம் அடிக்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை. மாறாக டி20 வடிவத்தில் 1000 சிக்ஸ்கள் சாதனையை கெயில் முதல் வீரராக செய்துள்ளார்.

Story first published: Monday, May 10, 2021, 19:26 [IST]
Other articles published on May 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+