For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சத்தமில்லாமல் உலக சாதனை படைத்த கெயில்…!! இதை யாருமே கவனிக்கலையே..!!

Recommended Video

World cup 2019 PAK VS WI | உலக கோப்பையில் முக்கியமான சாதனையை சமன் செய்தார் கெயில்

நாட்டிங்ஹாம்:'யுனிவர்சல் பாஸ்' மற்றும் 'சிக்சர் மன்னன்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், புதிய சாதனையை நிகழ்த்தி அனைவரின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், அந்த அணியின் மிக பெரிய ஸ்டார் வீரர். அணியின் அதிரடி ஆட்டக்காரர். தொடக்க வீரரான களம் இறங்கும் அவர், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார்.

குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் எல்லைக்கோட்டுக்கு பந்தை விரட்டுவதில் வல்லவரான இவர், எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் சிக்சர்கள் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பதில் முதலிடத்தில் உள்ளார்.

டி வில்லியர்ஸ்

டி வில்லியர்ஸ்

உலக கோப்பை தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களில் கெய்ல் மற்றும் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் 37 சிக்சர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

2 சிக்சர்கள்

2 சிக்சர்கள்

இந் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டி நாட்டிங் ஹாமில் நடைபெற்றது. அந்த போட்டியில் 4வது ஓவரை ஹசன் அலி வீசினார். இந்த ஓவரை எதிர் கொண்ட கிறிஸ் கெய்ல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார்.

அரை சதமடித்து அபாரம்

அரை சதமடித்து அபாரம்

இதன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனை அவர் படைத்துள்ளார். அதாவது 40 சிக்சர்களை அவர் பறக்க விட்டிருக்கிறார். இந்த போட்டியில் 34 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட்டானார். 2015 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கெய்ல், இரட்டை சதம் விளாசினார்.

அப்ரிடி 314 சிக்சர்கள்

அப்ரிடி 314 சிக்சர்கள்

அந்த போட்டியில், 16 சிக்சர்கள் பறக்கவிட்டதன் வாயிலாக, உலக கோப்பையில் ஓர் இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார் கிறிஸ் கெய்ல். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 314 சிக்சர்களுடன், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக, 2வது இடத்தில் உள்ளார். அப்ரிடி, 351 சிக்சர்கள் விளாசி இருக்கிறார்.

மன உளைச்சலில் கெயில்

மன உளைச்சலில் கெயில்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கெயில் உள்ள பல முன்னணி வீரர்கள், அணி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அணியில் போதிய மரியாதை இல்லை... ஊதியம் இல்லை என்று அவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். அதில் பெரும் மன உ ளைச்சலுக்கு ஆளானவர் கெய்ல்.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்கும் முடிவில் இருந்தார் கெயில். அப்போது அணி நிர்வாகமானது கெயிலை அணியில் எடுத்ததோடு மட்டும் அல்லாது துணை கேப்டன் பொறுப்பையும் அளித்து கவுரவப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் களத்தில் நின்று சிக்சர் அடித்து உலக சாதனை நிகழ்த்திய கெயிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Story first published: Friday, May 31, 2019, 20:53 [IST]
Other articles published on May 31, 2019
English summary
Chris gayle sets a new world record for most sixes in world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+