Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரட்டிய யூனிவர்சல் பாஸ்... ஷாக்கான அம்பயர்... என்ன இப்படி செஞ்சுட்டாரு?

டெல்லி : கடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு சாம்பியனுக்கு எதிரான அந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.

அணியின் மயங்க் அகர்வால் விக்கெட்டை மட்டுமே இழந்த பஞ்சாப்பின் கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் அந்த போட்டியை வெற்றியுடன் சிறப்பாக முடித்து வைத்தனர்.

17வது போட்டி

17வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் கடந்த 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி கொண்டது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 132 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக கொடுத்திருந்தது.

கெயில் அதிரடி

கெயில் அதிரடி

இதையடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தனர். ஆயினும் மயங்க் அகர்வால் 25 ரன்களில் அவுட்டானதை அடுத்து கிறிஸ் கெயில் அடுத்ததாக களமிறங்கி ராகுலுக்கு ஈடுகொடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தார்.

அம்பயரிடம் வம்பு

அம்பயரிடம் வம்பு

கேஎல் ராகுல் 60 ரன்களையும் கிறிஸ் கெயில் அவுட்டாகாமல் 43 ரன்களையும் அந்த போட்டியில் எடுத்து போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தனர். இந்த வெற்றியை அடுத்து அம்பயரை யூனிவர்சல் பாஸ் வம்பிழுத்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பயந்த அம்பயர்

பயந்த அம்பயர்

இந்த வெற்றியை அடுத்து அம்பயரிடம் செல்லும் கிறிஸ் கெயில் அவரை மிரட்டும் வகையில் செயல்படுவதும், அவரும் பயந்து ஒதுங்குவதும் நடக்கிறது. தான் இருக்கும் இடத்தை எப்போதும் சிறப்பான வைத்துக் கொள்பவர் கிறிஸ் கெயில். எதைப்பற்றிய பயமும் அவருக்கு இருந்ததில்லை. இவ்வாறு அவர் செயல்பட்டதில் வியப்பும் இல்லை.

டி20யில் சிறப்பு

டி20யில் சிறப்பு

தன்னை யூனிவர்சல் பாஸ் என்று கூறிக்கொள்ளும் கிறிஸ் கெயில், டி20 வடிவத்தில்சிறப்பான வீரராக திகழ்ந்து வருகிறார். அனைத்து லீக் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். தன்னிடம் உள்ள சரக்கு சற்றும் குறையவில்லை என்று சமீபத்தில் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 26, 2021, 23:21 [IST]
Other articles published on Apr 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+